Subscribe Us

கட்டாருக்கு அழைப்பித்து திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் பண மோசடி செய்த இருவரையும் கைது செய்யுமாறு உத்தரவு!

தோஹா கட்டார் இராச்­சி­யத்­துக்கு அழைப்­பித்து திரு­மணம் செய்து கொள்­வ­தாக உறு­தி­ய­ளித்து  பேஸ்புக் மூலம் காதல் தொடர்பை வளர்த்துக்  கொண்டு 3, 37500 ரூபாவை மோசடி செய்­த­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்­பாக சந்­தேக நபர்கள் இருவர்   கொழும்பு, கொள்­ளுப்­பிட்டி அந்­தோ­னியார் மாவத்­தையைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் செய்த முறைப்­பாடு தொடர்­பாக பொலிஸார் நீதி­மன்­றத்தில் அறிக்கை சமர்ப்­பித்­ததை
கவ­னத்­திற்­கொண்டு நீதவான் மேற்­படி உத்­த­ரவைப் பிறப்­பித்தார்.


முறைப்­பாட்­டாளர் தமது கைத்­தொ­லை­பே­சியில்  பேஸ்புக் பார்த்துக் கொண்­டி­ருந்­த­போது தோஹா கட்டார் ராச்­சி­யத்தில் மரத்­த­ள­பாட நிறு­வ­ன­மொன்றின் முகா­மை­யாளர் எனக் கூறிக் கொண்ட நப­ருடன் அறி­முகம் ஏற்­பட்­ட­தாக முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


கட­வத்தை பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரென தெரி­வித்த இவர் திரு­ம­ண­மாகி இரு
பிள்­ளை­களின் தந்தை எனவும் மனைவி தன்னை பிரிந்து சென்று வேறொ­ரு­வ­ருடன் வாழ்­வதால் பிள்­ளை­க­ளுக்கு தாயொ­ருவர் தேவை என்­பதால் தம்மை திரு­மணம் செய்து கொள்ள விருப்­பமா எனக் கேட்­ட­போது முறைப்­பாட்­டாளர் விருப்பம் தெரி­வித்­த­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.


இதன் பின்னர் காத­லர்­க­ளாக சில காலம் பழ­கி­ய­தாக தெரி­விக்கும் முறைப்­பாட்­டாளர் தம்மை தோஹா கட்டார் இராச்­சி­யத்­துக்கு அழைப்­பித்துக் கொள்ள சகல நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்த நபர் தெரி­வித்­த­தாக பெண் தெரி­வித்­துள்ளார்.


இந்த சந்­தர்ப்­பத்தில் பணம் இல்­லாத கார­ணத்தால் அவ­ரது வங்கிக் கணக்கில் பணம் வைப்புச் செய்­யும்­படி கூறி­யதால் பல சந்­தர்ப்­பங்­களில் 3,37500 ரூபாவை
வைப்­பி­லிட்­ட­தா­கவும் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நாட்­டுக்கு மீண்டும் வருகை தரும்­போது கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யும்­படி கொழும்பு கோட்டை நீதிவான் நீதி­மன்ற மேல­திக நீதிவான் திலிண கமகே உத்­த­ர­விட்டார்.
பின்னர் எது­வித தக­வல்­களும் இல்­லா­ததால் தாம் ஏமாற்­றப்­பட்­டுள்­ள­தாக அறிந்து கொண்­ட­தா­கவும் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 சம்­பவம் தொடர்­பாக விசா­ரணை நடத்தி தொலைபேசி அறிக்கைகளின்படி இரு சந்தேக நபர்கள் இச்சம்பவத்துடன் தொடர்பு கெண்டிருப்பதாகவும் இவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments