Subscribe Us

தம்புள்ளைக்கு உல்லாசப் பயணம் சென்ற மாணவ, மாணவிகள் மதுபோதையில்!

உல்­லாசப் பயணம் சென்ற அவி­சா­வளை பிர­தேச பாட­சா­லை­யொன்றின் உயர் வகுப்பு மாணவ, மாண­விகள் மது­போ­தையில் தம்­புள்ளை நகரில் முறை­யற்ற வகையில் நடந்­து­கொண்­டதை அடுத்து தம்­புள்ளை பொலிஸார் அந்த இடத்­துக்கு சென்று மாணவ, மாண­வி­யரை எச்­ச­ரிக்கை செய்து அனுப்­பி­வைத்­துள்­ளனர்.

மாணவ, மாண­விகள் உல்­லாசப் பய­ணத்­தின்­போது மது­ அ­ருந்­தி­விட்டு தம்­புள்ளை நகரில் இறங்கி முறை­யற்ற வகையில் நடந்­து­கொண்­ட­போது அப்­ப­கு­தியைச் சேர்ந்த இளை­ஞர்கள் மாணவ, மாண­விகள் மீது கல் வீச்சு நடத்த முற்­பட்­டுள்­ளனர்.


 அப்­போது கல்­வீச்சை தடுத்து நிறுத்தி பெரி­யவர் ஒருவர் பொலி­ஸா­ருக்கு தொலை­பேசி மூலம் தகவல் தெரி­வித்­ததை அடுத்து பொலிஸார் வந்து மாணவ, மாணவிகளை கடுமையாகஎச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments