Subscribe Us

நாங்களும் கொலையாளிகள் தான்!: ஏற்றுக் கொள்ளும் சிறிலங்கா

உலகின் எல்லா நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அதனை சரி செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் காரியவசம் தெரிவித்ததாவது,

"பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு சிறிலங்காவில் நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே உலகின் அனைத்து நாடுகளுமே ஏகமனதாக தீர்மானித்திருந்தன. எனவே, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்க வாய்ப்பில்லை.

அமர்வுகளில் பங்கேற்கத் தவறினால் குறித்த நாடுகள் தனிமைப்படுத்தப்படக் கூடும்.

இந்திய பிரதமர் இந்தியாவிற்கு மட்டும் தலைவர் அல்ல எனவும் ஆசியாவிற்கும் தலைவர் ஆவார். இதனை நினைவில் நிறுத்திக் கொண்டு இந்திய தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமானது" என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதா இல்லையா என்பதனை இன்னமும் பிரதமர் மன்மோகன் சிங் தீர்மானிக்கவில்லை.

அத்துடன் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதிலலை கனடா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வருவதாக இந்தியாவிற்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments