ஜிஎஸ்பி எனப்படும் வரிச்சலுகையை சிறிலங்கா இழந்ததால், 2010ம் ஆண்டுக்குப்
பின்னர், ஆடை ஏற்றுமதி மூலம் கிடைத்திருக்க வேண்டிய 782 மில்லியன் ரூபா
இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள்
மறுக்கப்படுவதைக் காரணம் காட்டி, ஐரோப்பிய ஒன்றியம், சிறிலங்காவுக்கு
வழங்கி வந்த வரிச்சலுகையை கடந்த 2010ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறுத்தியது.
இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறிலங்காவில் 25 ஆடை தயாரிப்புத்
தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், 10 ஆயிரம் பேர் வேலையை இழக்கும் நிலை
ஏற்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக தகவல் வெளியிட்ட முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன,
ஜிஎஸ்பி பிளஸ்ஸ் சலுகை பறிக்கப்பட்டதால், 2010ம் ஆண்டில், 10 ஆடைத்
தொழிற்சாலைகளும், 2011இல் 11 தொழிற்சாலைகளும், மேலும் 4 தொழிற்சாலைகள் 20
12இலும் மூடப்பட்டன என்று கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை பறிப்பினால், ஆடை ஏற்றுமதித் தொழில்
பாதிக்கப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் இதுவரை கூறிவந்தது
குறிப்பிடத்தக்கது.(PT)


0 Comments