Subscribe Us

வீடொன்றிலிருந்து மூன்று பேரின் சடலங்கள் மீட்பு

ருவன்­வெல்ல பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட அங்­கு­ரு­வெல்ல– - கல்­பத்த பகு­தியில் வீடொன்­றி­லி­ருந்து மூன்று சட­லங்­களை பொலிஸார் மீட்­டுள்­ளனர். 45 வய­தான நப­ரொ­ருவர் சுருக்­கிட்ட நிலை­யிலும் 35 வய­தான தாயொ­ரு­வரும் அவ­ரது 10 மாதக் குழந்­தையும் கொலை செய்­யப்­பட்ட நிலை­யிலும் இவ்­வாறு சட­லங்­க­ளாக நேற்று மாலை 4.30 மணி­ய­ளவில் மீட்­கப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் சிரேஷ்ட அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.
பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வ­லொன்றின் அடிப்­ப­டையில் இவ்­வாறு இச்­ச­ட­லங்கள் மீட்­கப்­பட்­ட­தா­கவும் பெண்ணின் உடலில் கத்­திக்­குத்துக் காயங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் அந்த அதி­காரி மேலும் தெரி­வித்தார்.
 
சுருக்­கிட்ட நிலையில் மீட்­கப்­பட்ட ஆண், சட­லங்கள் மீட்­கப்­பட்ட வீட்டின் உரி­மை­யாளர் என்­ப­துடன் சட­ல­மாக காணப்­பட்ட பெண்ணும் குழந்­தையும் அவ்­வீட்­டி­லி­ருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் வசித்­த­வர்­க­ளெ­னவும் பொலிஸார் சுட்­டிக்­காட்­டினர். குறித்த ஆண் தனது மனை­வி­யி­ட­மி­ருந்து விலகி தனி­யா­கவே அவ்­வீட்டில் வாழ்ந்­து­வந்­த­தாகக் குறிப்பிடும் ருவன்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(VK)

Post a Comment

0 Comments