1984: இந்திய பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்1517 : மார்ட்டின் லூதர், கிறிஸ்தவ சீர்திருத்தம் தொடர்பான தனது 95 கொள்கைகளை ஜெர்மனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார்.
1803 : கப்டன் ட்றைட்பேர்க் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியனின் படைகளைத் தாக்கின்.
1863 : நியூஸிலாந்தில் நிலை கொண்ட பிரித்தானியப் படைகள் "வைக்காட்டொ" என்ற இடத்தில்தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மவோரி போர்கள் மீண்டும் ஆரம்பமானது.
1876 : இந்தியாவின் கிழக்குக் கரையில் இடம்பெற்ற மிகப்பெரும் சூறாவளி காரணமாக 200,000 பேர் வரை இறந்தனர்.
1913 :- ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலையான லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1924: உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலானோ நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.
1931: - தமிழின் முதல் பேசும் படமான “காளிதாஸ்” வெளியானது.
1941:இரண்டாம் உலகப் போரில் ஐஸ்லாந்துக்கு அருகில் அமெரிக்கக் கப்பல் ஒன்றை ஜெர்மனியின் படகு தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக் கடற்படையினர்
கொல்லப்பட்டனர்.
1941: இங்கிலாந்தில் தொழிற்சாலை ஒன்று தீப்பற்றியதில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
1954 : - அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கெதிராக அல்ஜீரிய தேசிய
விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது.
1956 : - ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் சுயஸ் கால்வாயைத் திறக்க வற்புறுத்தி எகிப்தின் மீது குண்டுகளை வீசின.
1961 : - ஸ்டாலினின் உடல் மொஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
1963 : - இண்டியானாவில் பனிக்கட்டி சறுக்கல் களியாட்ட விழா ஒன்றின் போது இடம்பெற்ற வெடி விபத்தில் 74 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
1968 : வியட்நாம் போர்: பாரிஸ் அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வட வியட்நாம் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் நவம்பர் 1 இலிருந்து நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறிவித்தார்.
1973: அயர்லாந்தில் டப்ளின் நகர சிறை ஒன்றில் இருந்து வெளியேறிய மூன்று ஐரியக் குடியரசு இராணுவத்தினர் அங்கு தரையிறங்கிய கடத்தப்பட்ட ஹொலிகொப்டர் ஒன்றில்தப்பிச்சென்றனர்.
1984: - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால்
சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
1994 : - அமெரிக்க விமானம் ஒன்று கடும் பனி காரணமாக இண்டியானாவில்
விபத்துக்குள்ளாகியதில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
1996 : - விமானம் ஒன்று பிரேசிலில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 98 பேரும் தரையில் 2 பேரும் கொல்லப்பட்டனர்.
1999 : - எகிப்திய விமானம் ஒன்று மசாசுசெட்சில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 217 பேரும் கொல்லப்பட்டனர்.
2000: - சிங்கப்பூர் போயிங் 747-400 விமானம் தாய்வானில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் கொல்லப்பட்டனர்.
2000: - வடக்கு அங்கோலாவில் தனியார் அண்டோனொவ் விமானம் வெடித்துச் சிதறியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2003: - 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேஷியப் பிரதம மந்திரி மஹதிர் பின் மொஹட் தமது பதவியைத் துறந்தார்.
2011: உலக சனத்தொகை 700 கோடி எண்ணிக்கையை அடைந்தது.

0 Comments