Subscribe Us

கஞ்சா கலந்து மோதக உருண்டைகளை விற்பனை செய்தவர்கள் கைது

கம்பளை நகரில் கஞ்சா போதைப்பொருள் கலந்த மோதகங்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கம்பளை நகரில் உள்ள ஆயுர்வேத மருத்துவ விற்பனை நிலையங்களில் பொலிஸார் மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கையின் போதே கஞ்சா போதைப்பொருள் கலந்த மோதக உருண்டைகளை விற்பனை செய்வதை அறிந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த விற்பனை நிலையங்களிலிருந்து கஞ்சா போதைப்பொருள் கலந்த 225 மோதக உருண்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

Post a Comment

0 Comments