Subscribe Us

போர்மியூலா வன் போட்டிகளில் 4 ஆவது தடவையாக சம்பியனாகி வெட்டல் சாதனை

போர்மியூலா வன் குரோன் ப்றீ காரோட்டப் போட்டிகளில் ஜேர்மனிய வீரர் செபஸ்ட்டியன் வெட்டல் நான்காவது தடவையாக சம்பியனாகிய மிக இளம் வீரர் எனும் புதிய சாதனையை படைத்துள்ளார்.

26 வயதான செபஸ்ட்டியன் வெட்டல் ரெட் புல் அணி சார்பில் போட்டிகளில் பங்குபற்றுகிறார். இன்று ம நடைபெற்ற இண்டியன் குரோன் ப்றீ போட்டியில் அவர் முதலிடம் பெற்றார். புதுடில்லிக்கு அருகிலுள்ள நோய்டா காரோட்டப் பந்தயத்திடலில் இப்போட்டி நடைபெற்றது.

 19 கட்டங்களைக் கொண்ட இவ்வருட போர்மியூலா வன் தொடரில்  அபுதாபி, அமெரிக்கா, பிரேஸில் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் எஞ்சியுள்ளன. எனினும் 322 புள்ளிகளைப் பெற்றுள்ள செபஸ்ட்டியன் வெட்டல், சம்பியன் பட்டத்தை வெல்வதற்குத் தேவையான புள்ளிகளை அடைந்துள்ளார். அவருக்கு அடுத்ததாக கிமி ரெய்கோனன் 207 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.

இண்டியன் குரோன் ப்றீ போட்டிகளிலும் அவர் தொடர்ச்சியாக 3 தடவைகள் சம்பியனாகி ஹட்ரிக் சாதனை படைத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு இண்டியன் குரோன் ப்றீ போட்டிகள் ஆரம்பமானதிலிருந்து  3 வருடங்களிலும் செபஸ்ட்டியன் வெட்டலே சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

2010 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 4 தடவை போர்மியூலா வன் உலக சம்பியனாகியுள்ள வெட்டல் 4 தடவை சம்பியனான மிக இளம் வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.

- See more at: http://metronews.lk/article.php?category=sports&news=2682#sthash.px0KMpw8.dpuf

Post a Comment

0 Comments