Subscribe Us

header ads

பிள்ளைகளுக்கு பெயர் வைக்கிர நேரம் அப்புடி இருக்கோணும் இப்புடி இருக்கோணும் என்கிற லிஸ்ட்ல ட்ரண்ட் ஆகி இருக்கிறது டபள் நேம்

 


பிள்ளைகளுக்கு பெயர் வைக்கிர நேரம் அப்புடி இருக்கோணும் இப்புடி இருக்கோணும் யாருக்கும் வைக்காத பெயரா இருக்கோணும் நல்ல அர்த்தமுள்ள பெயரா இருக்கோணும் எங்குற லிஸ்ட்ல இப்ப அண்மைக் காலமாக எண்டர் ஆகிக்கிர சப்ஜெக்ட்தான் டபள் நேமாக இருக்கோணும் எங்குறது.


இப்ப அது பெஷனாக இருந்தாலும் இந்த டபள் நேம் கல்சர் நம்மட மூத்தப்பா மூத்தம்மா காலத்துல இருந்தே வந்திருக்கின்றது. அந்த அந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி சில பெயர்கள சேர்த்து டபள் நேம் வைத்திருக்கிறார்கள். அப்புடி ஒவ்வொரு காலத்துலயும் ட்ரெண்டிங்காக இருந்த சில நேம்ஸ்...

மூத்தப்பாமார்ட காலத்தில் அப்துல், லெப்பை, தம்பி, பாவா, பிச்சை, சேகு இப்புடி சில பெயர்கள் கடும் பேர்மசாக இருந்துள்ளது. இதோட இன்னுமொரு பேர சேத்து டபள் நேமாக வைக்கிரதுதான் அந்த காலத்துல ட்ரெண்டிங்க்.

உதாரணமாக...
அப்துல் கபூர், அப்துல் ஹமீட், இஸ்மா லெப்பை, உதுமா லெப்பை, பள்ளித் தம்பி, சின்னத் தம்பி, வெள்ளத் தம்பி, ஆதம் பாவா, முஹைதீன் பாவா, அல்லாஹ் பிச்சை, நாகூர் பிச்சை, சேகு தாவூத், சேகு இஸ்மாயில், சேகு இஸ்ஸதீன்

அந்தக் காலத்தில் சூபி, தரீக்கா சிந்தனைகள் மேலோங்கி இருந்ததால் பெயர்களும் அதனை ஒட்டியதாக வைத்திருப்பதனையே அவதானிக்க முடிகிறது.

அதே காலப் பகுதியில பெண்களுக்கு உம்மா, வீவீ, பாத்து போன்ற பெயர்கள் பேர்மசாக இருந்திருக்கு...

உதாரணமாக... ஹவ்வா உம்மா, செலஹா உம்மா, றாவியத்தும்மா, சாரா உம்மா, மர்யம் வீவீ, கதீஸா வீவீ, செய்யது பாத்து, முஹம்மது பாத்து இப்புடி பல...

இதோட ஒட்டி வந்த அடுத்த காலப்பகுதியில கான், தீன், அலி ஆகிய சில பெயர்களை ஆண்கள்ட பெயரோட சேத்து இரட்டைப் பெயராக வைத்திருக்கிறார்கள்.

உதாரணமாக... சபருள்ளாஹ் கான், நஸ்ருல்லாஹ் கான், யூசுப் அலி, அய்யூப் அலி, ஹஸன் அலி, நியாஸ்தீன், ஹாறுதீன், நூறுத்தீன், சம்சுத்தீன் இப்புடி

பொதுவா தீன் எங்குற சொல்ல முன்னுக்குள்ள பெயருடன் இணைத்தே வைத்திருக்கின்றார்கள்.

இந்தக் காலப் பகுதியில் பெண்கள்ட பெயர்களுக்கு ஐனுல், சித்தி போன்ற சில பெயர்களை சேர்த்து டபள் நேம் வைப்பது ட்ரெண்டிங்காக இருந்துள்ளது.

உதாரணமாக ஐனுல் றிபாயா, ஐனுல் ஹிதாயா, நூருல் ஐன், சித்தி பரீதா, சித்தி சலீமா இப்புடி...

80 மற்றும் 90 யிற்கு பிந்திய காலப் பகுதியில் ஆண்களுக்கு அஹமட், முஹமட் என்ற பேர சேர்த்து டபள் நேம் வெக்கிரதுதான் ட்ரெண்டிங்க்...

உதாரணமாக... நபீஸ் முஹம்மட், அஹமட் நிஸ்ரி, முஹம்மட் பாஹிம், சியாம் அஹமட் இப்புடி...

இதே காலப் பகுதியில பெண்கள்ட பெயர்ல பாத்திமா, பானு, பேகம் போன்றத சேத்து வைப்பதுதான் ட்ரெண்டிங்க்

உதாரணமாக ஆகிலா பாணு, சகீலா பாணு, பஸ்னா பேகம், நுஸ்ரா பேகம், பாத்திமா றிஹானா, பாத்திமா சஸ்னா

இவை எல்லாவற்றுக்கும் இடையில் டபள் நேம் எதுவும் இல்லாம சிங்கிள் நேம் வைத்த ஒரு கூட்டம் இருக்கு. அவங்க இப்ப என்ன செய்ராங்க எண்டா அவங்கட பெயரோட வாப்பாட பெயரையும் சேத்து டபள் நேமாக வைத்திருக்கிறார்கள்.

அப்படி வைப்பது ஒரு ட்ரெண்டிங்காகவும் உருவெடுத்துள்ளது.

உதாரணமாக அஸீம் ஜஃபர், பாஹிம் அமானுல்லாஹ், இன்ஷாப் டீன், ஹுஸ்னி ஜாபிர், இம்ரான் நெய்னார், சஜீர் முஹைதீன் ☺☺☺

சில நேரம் அஹமட், முஹம்மட் எண்டு டபள் நேம் உள்ளவங்களும் கூட அத கட் பண்ணிட்டு வாப்பாட பெயர சேத்து டபள் நேமாக பயன்படுத்துகின்றார்கள்.

இதே போல பெண்களும் வாப்பாவின் பெயரைச் சேர்த்து அறிமுகமாகின்றனர். அதே நேரம் ஆண்கள் Bபின் (இப்னு) போட்டு வாப்பாவின் பெயரை போடுவதும் பெண்கள் பின்த் போட்டு வாப்பாவின் பெயரைப் போடும் ஒரு வழக்கமும் அறிமுகமாகியுள்ளது.

சில தாராள மனம் படைத்த பெண்கள் தங்களுடைய பெயருடன் கணவனின் பெயரையும் சேர்த்து டபள் நேமாக பயன்படுத்துகின்றனர்.

இப்போ பிறக்கின்ற குழந்தைகளுக்கு பழைய ஒரு பெயரையும் புதிய ஒரு பெயரையும் சேர்த்து வைப்பதுதான் புது ட்ரெண்டிங்க்காம்.

உதாரணமாக யூசுப் ஷயான், அய்லான் அலி, ஆலிப் அப்துல்லாஹ், பிலால் பல்சம், ஹயா மர்யம், றீஹா செய்னப், ஆயிஷா இப்பத்...

அதுலயும் இப்ப எப்புடி பாக்குறாங்க எண்டா ஒரு பெயர்ட கடைசி எழுத்து மெய் (ன், ப், ல்) எழுத்துல முடிஞ்சா அடுத்த பெயர் மேல்விலங்கு (விசிறி - லி, ரி, தி) எழுத்துல முடியோணுமாம். பெண்ணாக இருந்தால் துணைக்காலுடன் (ஹா, தா, யா... ) முடியோணுமாம். அப்பதான் கூப்புடுறதுக்கு பசுந்தா ஈச்சுமாம்.

எப்புடி மாறி மாறி பெயர் வந்தாலும் இதுல மாட்டுபடுறது என்னமோ மௌலவிமார்தான். இருந்தும் மௌலவிமார்ட மக்கள் விரும்பத்தோட ஆசையோட ஆவலோட கருத்து முரண்பாடு வேறுபாடு இல்லாம கேக்குற ஒரே ஒரு விஷயம் என்னெண்டா அது பிள்ளைக்கி பெயர் கேக்குறது மட்டும்தான். எனவே அதையாவது கருத்து ஒற்றுமையோட செய்வம் எனா...

Sajeer Muhaideen
11/07/2023

Post a Comment

0 Comments