Subscribe Us

இனி பெட்ரோல் ஆட்டோக்களுக்கு இடம் இல்லை கட்டம் கட்டமாக நிறுத்தப்போகும் போக்குவரத்து அமைச்சு

 


சுற்றாடலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத போர் ஸ்ரோக் முச்சக்கர வண்டிகளை  (four-stroke) மின்சாரம் மூலம் இயங்கும் வண்டிகளாக மாற்றும் திட்டத்தை நாளை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் முதற்கட்ட நிகழ்வுகள் போக்குவரத்து அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் அனுசரணையுடன்  போக்குவரத்துத் திணைக்களத்தின் வெரஹெர கிளையில் ஆரம்பிக்கப்படும் என ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த தெரிவித்துள்ளார்.  

புதுப்பிக்கக்கூடிய அத்தியாவசிய சேவைகள், போக்குவரத்துத் துறை மற்றும் மற்றும் சிறிய தொழில் முனைவோரின் அபிவிருத்திக்காக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.

போக்குவரத்துத் திணைக்களம், சக்தி மற்றும் எரிபொருள் அமைச்சு, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணையத்தின் ஆகியவற்றடன் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments