நேத்துல இருந்து ஒரு பிரச்சினை போகுது அது என்ன எண்டா யூடியூப்ல சம்பாதிக்கிரது ஹலாலா ஹராமா எங்குற சப்ஜக்ட்தான்.
நம்மளப் பொறுத்தவரை இது நமக்கு தேலையில்லாத ஆணிதான். இருந்தும் கொஞ்சம் தேடி அறிஞ்சி வெச்சிக்குவோமேனு கோகுலன்டயும் யூடியூப்டயும் கேட்டு பாத்தா... சர சரனு ஏகப்பட்ட றிசேல்ட் அரபுலையும் ஆங்கிலத்துலயும்...
அதுல நவீன இஸ்லாமிய அறிஞர்கள் ஒருசிலர்ட கருத்த மட்டும் பாத்ததுல, வாசிச்சதுல... (ஒருசிலத மட்டும் என்பதனை உண்ணிப்பாக அவதானிக்கவும்)
முதலாவது விஷயம் என்னென்னா... எந்தவொரு அறிஞரும் யூடியூப் பாவிப்பதையோ அதுல வீடியோ அப்லோர்ட் பண்ணுறதையோ கூடாது என்று சொல்லவில்லை. சில ஒழுங்குகளைப் பேணி பாவிக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இத யாரு பாவிக்கேலும்... யாரு பாவிக்கேலா... எதெல்லாம் பாக்கேலும் பாக்கேலா எண்டு நிறைய வரையறைகள் இருக்கு அத நீங்க தேடி பாத்துக்கொள்ளலாம்.
இப்ப இரண்டாவது விஷயத்துக்கு வாங்க... யூடியூப்ல சம்பாதிக்கேலுமா அந்த பணம் ஆகுமானதா எங்குற சப்ஜக்ட். இப்புடி ஒரு கேள்வி வாறதுக்குரிய பிரதான காரணம் யூடியூப் நிறுவனம் வழங்குகின்ற பணம் விளம்பரத்தின் ஊடாக ஈட்டப்பட்ட பணம் என்பதால்.
போடப்படுகின்ற விளம்பரம் மார்க்கம் அனுமதித்ததா இல்லையா என்பதை வைத்தே இப்புடி ஒரு கேள்வியும் வருகுது.
எல்லாத்தையும் போல இதுலயும் அறிஞர்கள் பல கருத்துக்களை கூறி இருக்கின்றார்கள். அதுல நான்கு கருத்தை மட்டும் குறிப்பிடுகின்றேன்...
1. யூடியூப்பில் சம்மாதிக்கும் பணம் ஆகுமானது அல்ல. இதுக்கு சில ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள்.
2. யூடியூப்பின் சம்பாதிக்கின்ற பணம் ஆகுமானது. இதைச் சொல்பவர்கள் சில நிபந்தனைகளையும் சொல்கின்றார்கள். அத எதற்கு பாவிக்கேலும் எண்டெல்லாம் சொல்கின்றார்கள். (இத சொல்பவர்கள் குறைய பேர் என்பதனால் இது சம்பந்தமாக இன்னும் கொஞ்சம் தேடவேண்டியுள்ளது)
3. யூடியூப்பில் ஹலாலாகவும் சம்பாதிக்கலாம். அது எப்படி என்றால்... நான் மேல சொன்னது போல இங்க ஆகுமா ஆகாதா என்பத தீர்மானிக்கிரது விளம்பரம்தான். எனவே விளம்பரம் மார்க்க வரையறைக்குள் இருந்தால் சரிதானே.
இந்த அடிப்படையில் யூடியூப் நிறுவனத்துடனான ஒப்பந்தத்துடன் நாம் விரும்புகின்ற, மார்க்கம் அனுமதிக்கின்ற விளம்பரங்களை போட முடியும் என்பதாகும். இதனால் கிடைக்கும் பணமும் ஆகுமானது என்று சொல்கிறார்கள்.
முப்தி மென்க் கூட அவருடைய வெப்சைட்டில் Advertise with us https://muftimenk.com/advertise-with-us/ என்று போட்டும் இருக்கிறார்.
4. யூடியூப்பில் சம்பாதிப்பது அனுமதிக்கப்படாமல் இருந்து நம்மட வீடியோவ யூஸ் பண்ணி இன்னொருத்தர் யூடியூப்ல சம்பாதிக்கின்றார் என்றால் அதற்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள். இதனை தவிர்க்க டெக்னிகல் ரீதியா நிறைய விடையங்களை செய்ய முடியும்... கொப்பி றைட்டிங்க் கொடுக்க முடியும். அதையும் தாண்டி நடந்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது அவரே.
இப்புடி இந்த தலைப்பில நிறைய கிளை அம்சங்களும் இருக்கின்றது. எனவே யாராவது பொருத்தமான ஒருவர் இதனை விரிவாக ஆராய்ந்து இது தொடர்பான மார்க்க நிலைப்பாட்டை தமிழில் முன்வைப்பதே சிறந்தது என்பதே எனது எதிர்பார்ப்பு.
இறுதியாக இதுல நம்மட கருத்து என்ன என்றால்... இந்த பிரச்சினைய பொறுத்தமட்டில் இது சமூக வலைத்தளத்தில் விவாதிக்கின்ற விடையம் அல்ல. இது இரு சாரார் மட்டும் ஆழ அகலங்களோட விளங்கிக்கொள்ள வேண்டிய விஷயம். மற்றயவர்களுக்கு இது ஒரு தகவலாக மட்டுமே இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.
முதலாவது சாரார் மார்க்க சம்பந்தமான தேடல் உடையவர்கள், சமூகத்திற்கு நல்ல வழிகாட்டல்களை வழங்குகின்ற, மார்க்கம் சம்பந்தமாக ஆலோசனை வழங்குகின்ற உலமாக்கள். இவர்கள் இது சம்பந்தமாக தேடலாம் கலந்துரையாடலாம் அவை ஆரோக்கியமானது நல்ல விளைவுகளைத் தரக்கூடியது.
இரண்டாவது சாரார்... யூடியூப் செனல் செய்து சம்பாதிக்கின்றவர்கள். அவர்கள் கட்டாயம் இது சம்பந்தமான மார்க்க நிலைப்பாடு என்ன என்பதனை அறிந்திருக்க வேண்டும்.
யூடியூபில் சம்பாதிப்பவர்கள் மட்டுமல்ல பொதுவாக எந்தவொரு வியாபாரமாக, தொழிலாக இருந்தாலும் அது பற்றிய மார்க்கத்தின் நிலைப்பாட்டை அறிந்தே முன்னெடுக்க வேண்டும். இதுதான் இஸ்லாத்தின் எதிர்பார்ப்பும் கூட.
எனவே...
பல கருத்துக்கிடம்பான விடையங்களில்......
தீர்ப்புக்களை வழங்காது எங்களுடைய நிலைப்பாட்டை மட்டும் கூறுவோம்...
விவாதங்களையும் விதண்டாவாதங்களையும் தவிர்த்து கலந்துரையாடல்களை மேற்கொள்வோம். கலந்துரையாடல் அறிவையும் அன்பையும் வளர்க்கும். விதண்டாவாதம் அறியாமையும் வெறுப்பையும் வளர்க்கும்.
நுணிப்புல் மேயாமல் இயலுமானவரை தேடி ஆராய்ந்து எல்லா கருத்துக்களையும் முன்வைக்கப் பழகுவோம். முடிவெடுக்கும் பொறுப்பை வாசகர்களுக்கு விட்டுவிடுவோம்.
என்னை விட இதை வாசிப்பவர் இதில் தேர்ச்சிபெற்றவராக இருக்கலாம்..
அல்லாஹ் எம்மனைவரையும் ஐந்து கடமைகளையும் ஒழுங்காக செய்ய அருள்புரிவானாக...!
Sajeer muhaideen
06/05/2023
0 Comments