Subscribe Us

header ads

விசிட் விசாவில் துபாயில் வந்து வேலை தேட விரும்புகின்றீர்களா? இப்படி பண்ணா உங்களுக்கு வேலை கிடைப்பது உறுதி!

 


இன்று நம் நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்களின் கனவு வெளிநாட்டில் சென்று வேலை செய்ய வேண்டும் என்பதே. உள்நாட்டில் கிடைக்கும் சம்பளத்தை விட வெளிநாட்டில் பல மடங்கு சம்பளம் கிடைக்கும் என்பதே இதற்கான ஒரே காரணம்.

நம் நாட்டில் இரண்டு முதல் மூன்று டிகிரி வாங்கிய இளைஞர்களும் உள்நாட்டில் அவர்களின் தகுதிக்கேற்ற சரியான வேலை கிடைக்காமல் வெளிநாட்டில் சென்று வேலை பார்ப்பதை நம் கண்கூடாக பார்க்கின்றோம்.

ஏற்கனவே பல லட்சங்களை செலவு செய்து படித்த இளைஞர்களுக்கு மறுபடியும் ஏஜென்ட் பீஸ் கட்டி வெளிநாட்டுக்கு வேலைக்கு போக வேண்டுமா என்பதே பெரும் கவலையாக இருக்கும்.

அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு அரபு நாட்டில் இருக்கும் ஒரு பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் விசிட் விசாவில் சென்று எளிதாக வேலை தேடலாம் என்பதே. இப்படி தேடினால் ஏஜென்ட் பீஸ் கட்டுவதை விட பல மடங்கு பணம் குறைவு என்பதால் இப்படி சென்று வேலை தேடும் இளைஞர்கள் நம்மில் ஏராளம்.

ஆனால் அப்படி விசில் விசாவில் செல்லும்போது விசாவினை எத்தனை மாதங்களுக்கு எடுக்க வேண்டும்? எப்படி எடுத்தால் வேலை கிடைக்க வேண்டும்? என்பதைப் பற்றிய தெளிவான தகவல் தான் இந்த பதிவு.

விசிட் விசா எத்தனை மாதங்களுக்கு எடுக்க வேண்டும் என்பது பற்றி நாம் தெளிவாக முதலில் அறிய வேண்டும். சில நபர்கள் ஒரு மாதம் விசிட் விசா எடுத்தால் வேலை வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையுடன் துபாய் வருவார்கள்.

ஆனால் ஒரு மாதம் விசா எடுத்தால் 90 சதவீதம் உங்களால் இங்கு வேலை வாங்க முடியாது மேலும் சொல்லப்போனால் 99 சதவீதம் அதற்கு வாய்ப்பு குறைவு என்பதே உண்மையான தகவல். முதலில் அரபு நாட்டில் 90 நாட்களுக்கு விசிட் விசா எடுக்கும் வாய்ப்பு இருந்தது.

ஆனால் அது தற்போது 60 நாட்களாக குறைந்துள்ள நிலையில், விசிட் விசா 60 நாட்களுக்கு எடுப்பதே சிறந்தது. நீங்கள் ஒரு மாதத்திற்கு மட்டுமே விசா எடுக்கும் நிலையில் வெள்ளிக்கிழமை மதியம், சனி மற்றும் ஞாயிறு ஆகியவற்றை கணக்கு எடுத்துக் கொண்டால் மாதத்திற்கு 8 நாட்கள் இதில் கழிந்து விடும்.

எனவே மீதமுள்ள 20 நாட்களில் நீங்கள் இன்டர்வியூ அட்டென்ட் செய்து, உங்களுக்கு தேவையான ஆவணங்களை விசா ஸ்டாம்பிங் செய்வதற்கு ஒப்படைத்து, தேவையான மெடிக்கல் டெஸ்ட் எடுப்பது என்பது இயலாத காரியம்.

உங்களது உறவினர்கள் அங்கு இருக்கின்றார்கள் உங்களுக்கு தேவையான வேலையை ரெடியாக வைத்திருக்கிறார்கள் என்றாலும் கூட இந்த ஒரு மாத விசா என்பது உங்களுக்கு சரியான தேர்வு அல்ல.

ஏனென்றால் அரபு நாட்டு விதியின் படி இமிகிரேஷன் பணிக்காக பிங்கர் பிரிண்ட் கொடுக்க மட்டுமே தற்பொழுது ஒரு மாத காலம் ஆகின்றது.எனவே நீங்கள் ஒரு மாத விசா மட்டுமே போதும் என்பதை நம்பி இங்கு வர வேண்டாம்.

இரண்டாவது மெடிக்கல் டெஸ்ட்.நாம் தேர்ந்தெடுக்கும் நேரத்திற்கு மெடிக்கல் டெஸ்ட் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை என்பதே தற்போதைய நிலை.

மூன்றாவது கம்பெனியின் HR டிபார்ட்மென்ட். ஒரு விசாவிற்காக அவர்கள் ப்ராசஸ் செய்வதற்காக எடுத்துக் கொள்ளும் நேரம் ஆனது மிக மிக முக்கியம் ஏனென்றால் ஒரு விசாவிற்காக அவர்கள் குறைந்தபட்சம் 4,000 அரபு ரூபாய் செலவழிக்க வேண்டியதாக இருக்கும். எனவே அதற்காக அவர்கள் செலவழிக்கும் நேரமும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.

எனவே, இவற்றையெல்லாம் முன்கூட்டியே நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு அதை கேட்டார் போல் தயார் நிலையில் நீங்கள் அரபு நாட்டுக்கு வந்து வேலை தேடினால் உங்களுக்கு விசிட் விசாவில் வேலை கிடைப்பது உறுதி.

Post a Comment

0 Comments