Subscribe Us

header ads

பிரபல மொடல் நயோமி கம்பெல் இலங்கை சமஹனுடன்

 


பிரபல மொடல் நயோமி கம்பெல் தான் தனது பயணபையில் இலங்கையின் சமஹனை எப்போதும் எடுத்துச்செல்வதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின்  vogue சஞ்சிகைக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நயோமி கம்பல் தன்னுடன் என்ன எடுத்துச்செல்கின்றார்  என்ற  பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தயாரிக்கப்படும் சமஹன் நோயெதிர்ப்பிற்கு ஒரு சிறந்த பொருள் தனது பயணபையில் எப்போதும் அதனை வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த சமஹன் உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது என்கின்றார்

நான் எனது 8 ஐபொட்களை விட்டுவிட்டு எங்கும் செல்வதில்லை என தெரிவிக்கும் அவர் இதன் காரணமாக நான் தடையின்றி இசையை ரசிக்க முடியும் என தெரிவிக்கின்றார்.

விசேடமாக விமானப்பயணங்களின் போது தனது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்காக இஞ்சி மற்றும் சமஹன் தேநீரை பயன்படுத்துவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

Post a Comment

0 Comments