Subscribe Us

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு உதவி செய்கிறது (50 கோடி ரூபாய்)

 


மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு 42 மருந்து வகைகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் 3000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட மருந்து இவ் வருடம் ரூ. 30,000 ற்கும் ஏழாயிரத்திற்கு வாங்கப்பட்ட மருந்து ரூ. 39,000 ற்கும் அவசர கொள்முதல் அடிப்படையில் வாங்கவுள்ளதாக தெரிவிக்கின்றன.

இந்த மருந்துகளை வாங்குவதற்கான ஐம்பது கோடி ரூபாய் தொகையை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்குவதாகவும் தெரிய வருகிறது.

குறித்த கொள்முதல்களுக்கு  விலை மனுக்கோரல் சபை அனுமதி வழங்கியுள்ள போதும் சுகாதார அமைச்சு அந்த அறிக்கைகளை  மீள் பரிசீலனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது

Post a Comment

0 Comments