Subscribe Us

header ads

என்செட் ரொட்டி சாப்பிட தயாராகிவிட்டீர்களா? (உலக எகனாமிக்ஸ் மையம்.)

 


மக்கள் தொகை கூடிக்கொண்டு செல்கிறது. அரிசி, கோதுமைக்கு எல்லாம் தண்ணீர் நிறையவேண்டும். நிறைய பூச்சிக்கொல்லிகளும், உரமும் அவசியம்

இதை எல்லாம் தவிர்க்க என்செட்(enset) எனும் உணவை பரவலாக்கலாம் என ஆலோசனை சொல்லியிருக்கிறது உலக எகனாமிக்ஸ் மையம்.
என்செட் என்பது வாழைமரத்தின் குடும்பத்தை சார்ந்த ஒரு மரம். பார்க்க வாழை மரம் மாதிரியே இருப்பதால் இதை "போலி வாழைமரம்"(Fake banana) என அழைப்பார்கள்.
எத்தியோப்பியாவில் மட்டுமே இது விளைகிறது. இதில் பழம் எதுவும் விளையாது. ஆனால் இதன் வேரில் ஒரு பெரிய கிழங்கு கிடைக்கும். தண்டை உண்ணலாம்., நாரில் கயறு திரிக்கலாம். இலைகளை வாழை இலை போல பயன்படுத்தலாம்.
இதன் கிழங்கை எடுத்து அரைத்து ரொட்டி சுட்டு உண்டால் கோதுமை, அரிசிக்கு மாற்றாக இருக்கும் என்கிறது உலக பொருளாதார அமைப்பு. எத்தியோப்பியாவில் 2 கோடி மக்கள் இதைத்தான் உண்கிறார்கள். கிழங்கில் கஞ்சி கூட தயாரிக்கலாம்.
வாழை மாதிரி நிறைய நீர் தேவைப்படாது. வரட்சி காலத்திலும் தாக்குபிடிக்கும். உரம், பூச்சிக்கொல்லி மருந்து அவசியமில்லை.
ஆபிரிக்கா முழுக்க இதை பயிரிட்டு 10 கோடி பேரின் உணவு பற்றாகுறையை அடுத்த சில ஆன்டுகளில் தீர்க்கமுடியும், அதன்பின் உலகம் முழுக்க இதை பரவலாக்கலாம் என சொல்கிறார்கள்.
என்செட் ரொட்டி சாப்பிட தயாராகிவிட்டீர்களா?
~ நியாண்டர் செல்வன்

Post a Comment

0 Comments