Subscribe Us

header ads

Wolfsburg அணி வீரர்களை நோக்கி அவன் காட்டிய புன்னகை ஒன்று மட்டுமே போதும் தான் யார் என்பதை உணர்த்திட

 


"உண்மையில் ரொனால்டோவை Defend செய்வது, என் பையனோடு ஆடுவதை விட இலகுவானது"

இது 2016 ஆம் ஆண்டு Wolfsburg அணியின் Defense வீரரான Dante என்பவர் ரொனால்டோ பற்றி கூறியது. இதற்கு பின்னால் ரொனால்டோ எனும் வீரனின் பெரும் வரலாறே உண்டு.

2016 ஆம் ஆண்டு UEFA Champions League இன் காலிறுதி போட்டிக்காக Real Madrid மற்றும் அவர்களை எதிர்த்து ஆட Wolfsburg ஆகிய அணிகள் தெரிவாகி இருந்தன. UCL இன் விதிப்படி இறுதி போட்டி தவிர ஏனைய Knockout போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

முதல் போட்டி ஒரு அணியின் சொந்த மைதானத்திலும், அடுத்த போட்டி மற்றய அணியின் சொந்த மைதானத்திலும் நடைபெறும். இறுதியில் இரண்டு போட்டிகளையும் சேர்த்து எந்த அணி அதிக கோல்களை பெறுகிறதோ அந்த அணியே வெற்றியாளர்களாக முடிவு செய்யப் படுவார்கள் (இதையே சுருக்கமாக Aggregate என்பர் )

இவ்வாறு தான் முதல் போட்டி Wolfsburg அணியின் சொந்த மைதானமான Volkswagen Arena வில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் 2-0 என தோற்றுப் போனது Real Madrid. அப்போது தான் பல விமர்சனங்கள் Ronaldo மீதும் Real Madrid மீதும் எழ தொடங்கின. அதில் ஒன்று தான் நான் மேற்குறிப்பிட்ட Dante எனும் Wolfsburg அணி வீரரின் எரிச்சலூட்டும் வார்த்தைகள்

Ronaldo இற்கு விமர்சனங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த தடவை கொஞ்சம் அதிகமாகவே வறுத்து எடுத்து விட்டார்கள். நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய போட்டி. இதை எல்லாம் அவன் எப்படி சமாளிக்க போகிறான் என்பதை பார்க்கவே அனைவரும் ஆவலாக இருந்தார்கள்.

அடுத்த போட்டியும் Real Madrid அணியின் கோட்டையான Santiago Bernabeu விற்கு நகர்ந்தது. Ronaldo விற்கு அந்த போட்டியை வெற்றி பெறுவதோடு சேர்த்து, சில சொந்த கணக்குகளை தீர்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் இருந்தது. போட்டியை ஆரம்பத்திலேயே தன் கையில் எடுத்தான்

Real Madird அணியின் Aggressive ஆன ஆரம்பம் வீண் போகவில்லை, முதல் 15 ஆவது நிமிடத்திலேயே ரொனால்டோவிடம் இருந்து அபாரமன கோல் ஒன்று. அதிலிருந்து 2 நிமிடங்கள் கூட சென்றிருக்காது மீண்டும் ஒரு கோல் அதே நாயகனிடம் இருந்து. போட்டி Aggregate இல் 2-2 என சமநிலை அடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் 77 ஆவது நிமிடம் அரங்கமே அதிர்ந்து போகிறது. Hatrick From Ronaldo என வர்னணையாளர்கள் துள்ளிக் குதிக்க, மூன்றாவது கோலையும் அடித்து விட்டு Wolfsburg அணி வீரர்களை நோக்கி அவன் காட்டிய புன்னகை ஒன்று மட்டும் போதும்.

அவன் தான் யார் என்பதை அவர்களுக்கு காலம் முழுக்க உணர்த்தி இருக்கும். மீண்டும் சொல்கிறேன் விமர்சனங்களில் வளர்ந்தவன் அவன். இவை எல்லாம் அவனை தடுத்து விடுமா என்ன?

Comeback Stronger Champ

Rihaam Ahamed Haneefa

Post a Comment

0 Comments