Subscribe Us

header ads

ஜிமெயிலை பின் தள்ளிவிட்டு உலகின் நம்பர் ஒன் மின்னஞ்சல் க்ளையண்ட் வரிசையில் முதலிடம் பிடித்தது ஆப்பிள்.


 ஜிமெயில் தான் உலகின் நம்பர் ஒன் இமெயில் சேவை. யுடியூப் பார்க்கணும்னா ஜிமெயில் கணக்கு வேண்டும்


ஆனால் உங்களிடம் பல மின்னஞ்சல்கள் இருக்கும். எல்லாவற்றையும் நிர்வாகம் செய்ய இமெயில் க்ளையன்ட் தேவை. அதில் தான் 60% மார்க்கட் ஷேரை பிடித்து முதலிடத்துக்கு வந்துள்ளது ஆப்பிள். இரன்டாமிடம் கூகிளுக்கு. 29%.

கார்ப்பரேட் மின்னஞ்சல் சேவைகளில் கூகிளின் ஆதிக்கம் நீடிக்கிறது. ஆனால் மைக்ரோசாப்ட் அவுட்லுக் புயல்வேகத்தில் மேலேறி வருகிறது. கூகிளும் விட்டேனா பார் என அவுட்லுக்கின் அனைத்து சேவைகளையும் தானும் வழங்கும் முனைப்பில் ஈடுபடுள்ளது. ஆனால் வர்ட், எக்ஸெல், ஆபிஸ் இருப்பதால் அவுட்லுக் மூலம் அவற்றை இணைப்பதே கார்ப்பரேட்களுக்கு சவுகரியமாக இருக்கிறது என்பதால் அவுட்லுக் காட்டில் அடைமழை

ஆனால் 2கே கிட்ஸ் எல்லாம் மின்னஞ்சல் என்றால் புறாவின் காலில் ஓலையை கட்டி அனுப்பும் ஒரு பூமர் கால தகவல் தொடர்பு முறை என தான் நினைத்துக்கொண்டுள்ளனர். எல்லா தகவல் தொடர்பும் செல்போன், வாட்ஸாப்பில் தான்.பல கார்ப்பரேட்டுகள் ஜாபர், ஸ்லாக் மாதிரியான உடனடி இன்ஸ்டன் மெஸேஜ் சேவைகளுக்கு மாறிவருகின்றனர். மின்னஞ்சல் என்பது மிக அதிகாரபூர்வமான ரெகார்டுகளுக்கும், ஜன்க்மெயில்களுக்கும் மட்டுமே என மாறிவருகிறது

~ நியான்டர் செல்வன்

Post a Comment

0 Comments