Subscribe Us

header ads

KALPITIYA TALK வட்சாப் குழும இளைஞர்களின் மனித நேய பனி.

 


கல்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கு கர்ப்பிணி தாய் ஒருவர் அழைத்து வரப்பட்டார் அந்த தாய்க்கு தலை பிரசவம் என்பதால் புத்தளம் ஆதார வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட வேண்டிய கட்டாயம் இருந்தாலும் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு அந்த கர்ப்பிணி தாயையும் விட்டு வைக்கவில்லை


உடனடியாக செயல்பட்ட கல்பிட்டி இளைஞர்கள் Kalpitiya Talks என்னும் பல அவசர அவசிய சந்தர்பத்தில் உதவும் கல்பிட்டியின் பிரபலமான வட்ஸ்அப் குழுமத்திற்கு தகவல் பறந்தது சுமார் பத்து நிமிடங்களில் அந்த கர்ப்பிணி தாயை அழைத்து செல்ல கல்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கு வேன் ஒன்று விரைந்து வந்து அழைத்து செல்லப்பட்டார்.

இதற்கு முதலும் எரிபொருள் இல்லை என வைத்திய சாலை நிர்வாகம் கைவிரித்த நேரம் இந்த மனித நேய வட்ஸ்அப் குழுமத்தின் இளைஞர்களின் உதவியால் அவசர நோயாளிகள் புத்தளம் ஆதார வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல தற்காப்பு ஏற்பாடுகளும் இந்த குழுமத்தின் மூலம் கல்பிட்டி இளைஞர்கள் மேற்கொண்டு வருவதும் பாராட்ட தக்கதே

இந்த Kalpitiya Talks குழுமத்தின் நாமும் ஒரு உறுப்பினர் என்பதை கூறிக் கொள்வதில் பெருமையடைகிறேன். 

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments