Subscribe Us

வாக்கெடுப்பு நிறைவு - அடுத்த ஜனாதிபதி யார்?

 


இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.


அதனடிப்படையில் 223 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

மூன்று வேட்பாளர்கள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, டிலான் பெரேரா மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையை அவதானிக்கவுள்ளனர்.

எஸ். கஜேந்திரன் மற்றும் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.   

Post a Comment

0 Comments