Subscribe Us

header ads

Dammika போன்ற வியாபாரிகளால் அரசியல் செய்ய முடியும் ஆனால் புலமை அரசியல் செய்ய முடியாது


வியாபாரிகளால் அரசியல் செய்ய முடியாதா என்று கேட்டால் , முடியும் என்பதே பதில்.

அவர்கள் அரசியலை செய்யக்கூடாதா எனக்கேட்டால் அதற்கும் செய்யலாம் என்பதே பதில்.

ஆனால் , வியாபாரிகளால் சர்வதேசத்தை ராஜத்தந்திர முறையிலே அனுக முடியுமா என்று கேட்டால் , இங்கே தான் இடிக்கும்.

சர்வதேச உறவு (International Relations) என்பதற்கும் , ராஜத்தந்திர உறவு (Diplomatic) என்பதற்குமிடையிலே வித்தியாசமுண்டு.

ஒரு வியாபாரி சர்வதேசத்திலே உள்ள , இன்னொரு வியாபாரியோடு அல்லது வியாபார நிறுவனங்களோடு உறவை வைக்க முடியும்.

அவர் சர்வதேச முதலீட்டாளர்களை அழைத்து வரவும் முடியும்.

இதிலே எந்தவித முரணும் கிடையாது.

ஆனால் , இன்னொரு நாட்டு அரசாங்கத்தோடோ , தூதரகங்களோடோ , நிதி நிறுவனங்களோடோ ஒருவர் தொடர்பை வைக்கவும் , சாதிக்கவும் வேண்டும் என்றால் , அங்கே தான் அவருக்கு அரசியல் புலமையும் , அனுபவமும் தேவை.
இங்கிருக்கும் மிகப்பெரும் பணக்காரர் ஒருவர் , அமெரிக்காவிலுள்ள பில்கேட்ஸை இலங்கையிலே முதலீடு செய்ய வைக்கலாம்.

ஆனால் , அமெரிக்க வெள்ளை மாளிகையோடு பேச எடுத்த எடுப்பிலே அவரால் முடியாது.

நம்மவர்கள் பலரது மனப்போக்கு இந்த விடயத்திலே கவலைக்குரியதே !

பணத்தாலும் , பணக்காரனாலும் எதையும் செய்யலாம் என நினைக்கிறார்கள்.

இவர்களது இந்த மனப்போக்கிற்கேற்பவே உயர்ப்பீடங்கள் காய்களை நகர்த்துகிறது.

பாவம் மக்கள் , அடிமையாக வாழ்வதற்கே ஆசைப்படுகிறார்கள்.

பலியாடுகளாக கழுத்தை நீட்டவே காத்திருக்கிறார்கள்.

பணமுள்ளவனுக்கு அரசியல் செய்யலாம் என்ற நிலை மாறி , அது உள்ளவனுக்கு மட்டும் தான் அரசியல் செய்யலாம் என்ற நிலை உருவாக்கப்படுகிறது.

இங்குள்ள அந்த மட்டுமே என்பது தான் ஆபத்து நிறைந்தது.
கவனிக்க வேண்டியது .

அரசியல்வாதியை எதிர்க்க இன்னொரு அரசியல்வாதி என்பது மாறி , ஒரு பணக்காரனை எதிர்க்க இன்னொரு பணக்காரனையே இறக்க வேண்டுமென்ற நிலை உருவாக்கப்படுகிறது.

-MIM INFAS-

Post a Comment

0 Comments