சவுதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களாக வேலை செய்பவர்கள், அதாவது ஹவுஸ் டிரைவர், ஹாரிஸ், வீட்டுப் பணிப்பெண், வீட்டில் தோட்ட வேலை செய்பவர்கள் பெரும்பாலோனோருக்கு மருத்துவ இன்சூரன்ஸ் இருக்காது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் இவர்களால் சிகிச்சை பெறவேண்டுமென்றால் கட்டணம் செலுத்த வேண்டும்.
இது போல் உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெறலாம்.
சாதாரண காய்ச்சல், முதல் நாள்பட்ட நோய் (sugar) போன்றவைகளுக்கும் சிகிச்சை பெறலாம். மேலும் மருந்துகளும் இலவசமாக பெறலாம்.
1. ஆரம்ப சுகாதார நிலையத்தில்(Primary Health center) சிகிச்சை பெறலாம்.
2. வாரத்திற்கு ஐந்து நாள் வேலை நாட்கள் ஆகும். (வெள்ளி சனி விடுமுறை)
3. மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பதிவு (Appointment) கட்டாயமாகும்.
முன்பதிவு (Appointment) பெறுவது எப்படி?
Sehhaty & Mawid அப்ளிகேஷன்கள் வழியாக பெறலாம்.
இது
சம்பந்தமாக சந்தேகங்கள் அல்லது அப்பாயின்மென்ட் எடுத்து தர வேண்டுமென்றால்
கற்பிட்டியின் குரல் அட்மின் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
00966501969597
0 Comments