Subscribe Us

தனக்கோ, தனது தந்தைக்கோ இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை - Namal Rajapaksha

 


தனக்கோ, தனது தந்தைக்கோ இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும்,

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன்.

  எனது தந்தை மகிந்த ராஜபக்சவிற்கோ அல்லது எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை.

அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார் என குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments