ஏற்கனவே நீரிழிவு அல்லது சர்க்கரை நோயுள்ள பெண் கர்ப்பமாவதற்கு முன்னர்
1. சர்க்கரை நோயை சரியாக கட்டுப்படுத்தாமல் கர்ப்பமடைவதை தவிர்க்கவும்.
HbA1c எனும் பரிசோதனை கடந்த மூன்று மாதத்திற்குள் குருதியில் சீனியின் மட்டத்தை எதிர்வுகூறும் பரிசோதனை. இதன் மட்டம் 6.5 % ஐ விட குறைவாக இருக்கும் போது கர்ப்பமானால் கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோயால் பாதிப்புகள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகும்
அது 9% ஐ விட அதிகமானால் கர்ப்பமடைவதை தாமதிக்கவும்.
poorly controlled diabetes இன் விளைவுகள்


குறிப்பாக சொன்னால் உதடு தாடை உருவாகும் போது இடைவெளிஉருவாதல் Cleft lip /palate , இதயத்தில் உருவாகும் குறைபாடுகள் , முள்ளந்தண்டு உருவாகும் போது குறைபாடு உருவாதல்



இவ்வாறு பல விளைவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்
1. எனவே தகுந்த வைத்தியநிபுணரை நாடி சீனி மட்டத்தை சரிப்படுத்திய பின்னர் கர்ப்பமடைவது சிறந்தது.
2. போலிக்கமிலம் Folic acid 5mg மாத்திரைகளை கர்ப்பமடைய 3 மாதத்திற்கு முன்னிருந்தே பாவிக்க தொடங்கியிருந்தால் சிறந்தது.
3. சர்க்கரைநோயால் கண் , சிறுநீரகம் Kidney பாதிப்படைந்துள்ளதா என்பதை பரிசோதித்துக்கொள்வது சிறந்தது.
4. உடல் நிறை BMI சரியான மட்டத்தில். ( BMI < 25 ) கட்டுப்படுத்த வேண்டும்.
Dr A C M Musthaq
Consultant obstetrician and gynaecologist
National Hospital Kandy
0 Comments