Subscribe Us

அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆய்ஷாவின் மரண பரிசோதனை இன்று!


பண்டாரகம-அட்டுலுகமவில் சதுப்பு நிலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாத்திமா ஆய்ஷாவின் மரண பரிசோதனைகள் பண்டாரகம ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளது.

அத்துடன் சிறுமியின் மரணம் தொடர்பில் பல தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் 5 பொலிஸ் குழுக்கள் என்பன விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம், மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் தற்போது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments