Subscribe Us

header ads

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள கோரிக்கை

 


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி தாம் நடத்தும் கலந்துரையாடலின் அடிப்படையில் அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


இன்று (08) காலை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகாரிகளை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உள்ள 11 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் இன்று காலை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகாரிகளை சந்தித்தனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்க அலுவலகத்தில் இன்று காலை இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.  

Post a Comment

0 Comments