Subscribe Us

அட்டுலுகம சிறுமி ஆயிஷா படுகொலை விவகாரம் - பல ஆதாரங்கள் நாசம் புதினம் பார்க்க வந்தவர்களால்

 


அட்டுலுகம சிறுமி ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான பாரியளவிலான ஆதாரங்கள் நாசமாகி உள்ளதாக தெரிவிக்கின்றார்.


பல்வேறு நபர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட காலணிகளும் சேற்றில் சிதறிக் கிடந்ததாக அதிகாரி தெரிவித்தார்.


உடல் கண்டெடுக்கப் பட்டவுடன், புதரை அகற்றிக்கொண்டிருந்தவர்களும், செய்தி அறிந்த ஏராளமான கிராம மக்களும் பல்வேறு இடங்களில் இருந்து புதருக்குள் நுழைந்து உடலைப் பார்க்க வந்ததாக அதிகாரி கூறினார்.


இதன்காரணமாக சிறுமியின் உடலை தடயவியல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மட்டுமே மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments