Subscribe Us

header ads

'This Message Was Deleted' வட்சாப்பின் அழிக்கும் கால அவகாசம் இரட்டிப்பாகிறது

 


வட்ஸ்அப் மெசேஜ்களை இரண்டரை நாட்களுக்குள் அழிக்க கால அவகாசம் வருகிறது... & குரூப் மெசேஜ்களை அட்மினால் நீக்கவும் வசதி வருகிறது.


வட்ஸ்அப் நிறுவனம் மெசேஜ்களை அழிப்பதற்கான
(Delete) கால அவகாசத்தை நீடிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. அதாவது வட்ஸ்அப் பயன்படுத்தும்போது நாம் கை தவறி அல்லது பிழைகளுடன் ஒரு மெசேஜ்களை குரூப் அல்லது தனி நபரொருவருக்கு அனுப்பி இருப்போம்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பதறிப்போய் Delete For Everyone என்ற தெரிவினூடாக எமது செய்தியை எளிமையாக அழிப்பது வழக்கம். இருந்தபோதிலும் இந்த வாய்ப்பு சிறிது நேரத்துக்கு மட்டுமே கிடைக்கும். குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் Delete For Everyone என்ற தெரிவு கிடைக்காது.

இந்நிலையில் ஒவ்வொரு வட்ஸஅப் பயனாளர்களுக்கும் செய்திகளை அழிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து வட்ஸ்அப் நிறுவனம் ஆலோசித்து வருகிறது. தற்போது உள்ள விதியின்படி ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் 16 நொடி வரையிலும் மட்டுமே நீங்கள் Delete For Everyone என்ற தெரிவை பயன்படுத்தி செய்திகளை அழிக்க முடியும்.

குறிப்பாக இந்த கால வரம்பை நீட்டிப்பது குறித்து வட்ஸ்அப் நிறுவனம் பரிசீலனை செய்து வருகிறது என்று வாபேடா இன்ஃபோ (WABetaInfo) என்ற நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இது எப்போது அமுலுக்கு வரும் என சரியான தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

அதேபோல் வட்ஸ்அப் பீட்டா வெர்சன் (Beta version) 2.22.410 என்ற மேம்படுத்தப்பட்ட எப்பை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு, செய்திகளை நிரந்தரமாக அழிப்பதற்கான வாய்ப்பை இரண்டு நாள், 12 மணி நேரத்துக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது ஒரு மெசேஜை நீங்கள் பதிவு செய்த பிறகு இரண்டரை நாள் கழித்தும் கூட மற்றவர்களின் பார்வையில் இருந்து நிரந்தரமாக அழித்து விட முடியும். மெசேஜ் அழிக்கப்பட்டதன் பின்னர், “திஸ் மெசேஜ் வாஸ் டெலீடட்- (This messege was deleted) ” (இந்த மெசேஜ் டெலீட் செய்யப்பட்டது) என்ற Notification வரும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் வட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குழுவில் வரும் மெசேஜ்களை நீக்குவதற்கு அதன் அட்மின்களுக்கு அதிகாரம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஒரு குழுவில் யார் செய்தி அனுப்பினாலும் அதை அட்மினால் நீக்கம் செய்ய முடியும் என கூறப்படுகிறது. இது குழு நிர்வாகியால் நீக்கப்பட்டது என திரையில் ஒரு குறிப்பு மட்டும் தோன்றும் என கூறப்படுகிறது.

ஒரு மெசேஜை நீங்கள் பதிவு செய்த

அதுமட்டுமின்றி குரூப்பில் பகிரப்படும் பல்வேறு செய்திகளுக்ககும் குழு அட்மின்களே பொறுப்பேற்க வேண்டிய நிலை இருந்தது. இந்த தொல்லையில் இருந்து விடுபட குழு ஆரம்பிக்கும் அட்மின்கள் யாரெல்லாம் மெசேஜ்களை பகிரலாம் என்ற விருப்பத்தை தெரிவு செய்யும் வசதி பயன்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் ஒருவர் தவறாக மெசேஜை பகிரந்துவிட்டாா். அதை குழு அட்மினால் எதுவும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பொறுப்பேற்கும் நிலைக்கும் குழு அட்மின்கள் தள்ளப்பட்டனர்.

இதையடுத்து தேவையற்ற பதிவுகளை நீக்கும் வகையிலான புதிய அப்டேட்டை குழு அட்மின்களுக்கு வட்ஸ்அப் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments