வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. இது உணவுக்கு சிறந்த சுவையை அளிப்பதில் இருந்து பல்வேறு வகையான வியாதிகளை போக்குவது வரைக்கும் இதன் பயன்கள் ஏராளம். வெந்தய விதைகளை வழக்கமாக உட்கொள்வது பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. எடையைக் குறைக்கவும் உதவுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த வெந்தய விதைகளில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது.
எந்தெந்த வழிகளில் வெந்தய விதைகளை (Methi Seeds) உட்கொள்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
வெந்தயம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் எடையை குறைக்கவும் உதவுகிறது.
வெந்தய விதைகள் தண்ணீர்: உடல் எடையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் வெந்தய விதை நீரை குடிக்கலாம். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த நீரை விதைகளுடன் காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் உட்கொள்ளவும்.
0 Comments