Subscribe Us

இலங்கையில் பெண்களுக்காக இலவச தொலைபேசி சேவை அறிமுகம்

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கமைய பெண்களுக்காக இலவச தொலைபேசி சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1938 என்ற தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவின் தலைமையில் பத்தரமுல்லை, செத்சிறிபாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.


இந்த தொலைபேசி சேவை 24 மணித்தியாலங்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சேவையின் மூலம் நாட்டின் எந்த பாகத்திலிருந்தும் கட்டணமின்றி 1938 என்ற இலக்கம் ஊடாக பெண்களுக்கு இடம்பெறும் துன்புறுத்தல்கள், பாலியல் தொல்லைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் தெரியப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

Post a Comment

0 Comments