கல்பிட்டியில் வாழ்ந்து மறைந்த மீரா சாகிபு மொகிதீன் பிச்சை என்பவர் 50-60 காலப்பகுதியில் வாணவேடிக்கை கைத்தொழிலில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கினார்.
கல்பிட்டி பிரதேசத்தில் அக்காலப்பகுதியில் நடைபெற்ற நடைபெற்ற சகல திருமண நிகழ்வுகளில் இவரின் வாணவேடிக்கை முக்கிய இடத்தைப் பிடித்து இருந்தது,இவருடைய வாணவேடிக்கையை பார்ப்பதற்காகவே பலர் திருமண வீட்டுக்கு வருவதுண்டு.
பள்ளிவாசல் துறை கிராமத்தில் தரவை பள்ளிவாசலில் வருடா வருடம் கூடு அலங்காரப் பவணி நிகழ்வு நடைபெற்று வந்தது (இன்றும் நடைபெற்று வருகிறது)இந்த நிகழ்வு தொடர்ந்து மூன்று இரவுகள் நடைபெறும்,அந்த கூடு அலங்காரப் பவணியில் முகிதீன் பிச்சை அவர்களின் வாணவேடிக்கை நிகழ்ச்சியை பார்பதற்காகவே பல இடங்களிலிருந்தும் அதிகமான மக்கள் வருவதுண்டு இவர் பல வகையான வாணவேடிக்கை செய்வதில் வல்லவராக பிரசித்தி பெற்று விளங்கினார்.
1955 ஆண்டு இவரை மக்கள் மனதில் தூக்கி நிறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
1955ல் அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவல அவர்கள் வீட்டுத் திட்டம் ஒன்றை கல்பிட்டி வறிய மக்களுக்கு கையளிப்பதற்கு வருகை தந்திருந்தார் (இந்த வீட்டுத்திட்டத்தில் மொகிதீன் பிச்சை அவர்களுக்கும் வீடு ஒன்று வழங்க இருந்ததும் குறிப்பிடத்தக்கது)
பிரதமரின் வரவேற்பு நிகழ்வில் மொகிதீன் பிச்சை அவர்களின் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் இடம் பெற்றது, .
"Welcome to the Prime minister Sir John Koththelawela"
("பிரதமரை கல்பிட்டி மக்கள் அன்புடன் வரவேற்கிறோம்") என்ற ஆங்கில மொழியில் ஆகாயத்தில் ஒளிரச் செய்து கல்பிட்டி மக்களையும் பிரதம மந்திரியையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இதை கண்டு மகிழ்ச்சியடைந்த பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல அவர்கள் வீட்டு திட்டத்தின் மூலதாவது வீட்டை மொகிதீன் பிச்சை அவர்களுக்கு வழங்கு திறந்தும் வைத்தார் .அத்துடன் வாணவேடிக்கை செய்வதற்கும் அதற்கான வெடி மருந்து பொருட்கள் வாங்குவதற்முமான அனுமதி பத்திரத்தையும் வழங்கி அவரை கெளரவப்படுத்தினார்.
இவ்வாறு ஒரு பிரதமரால் கெளரவிக்கப்பட்ட கல்பிட்டியான் என்ற பெருமையை பெற்ற மொகிதீன் பிச்சை என்ற சாதனையாளனை நினைவு கூறுவதில் பெருமை அடைகிறேன்.
தற்போது M.S.மொகிதீன் பிச்சை அவர்களின் வாரிசுகள் கல்பிட்டி வன்னி முந்தல் பகுதியில் சிறப்போடு வாழ்ந்து வருகிறார்கள்.
மறுமையில் வாழும் மொகிதீன் பிச்சை அவர்களை அல்லாஹ் பொருந்தி கொள்வானாக . ஆமீன்
தகவல்:S.M.S.ஆப்தீன் ஆசிரியர்.
-Rivi Hussain-
0 Comments