Subscribe Us

எமது ஜனாநாயக நாட்டின் இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம் உள்ளே


ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. 

இன்று மாலை 5 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும். 

இதன்படி இன்று காலை 10.00 மணிவரை கொழும்பில் 20 சதவீத வாக்குப் பதிவுகளும், மாத்தளையில் 25 சதவீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. 

மேலும் கேகாலையில் 23 சதவீத வாக்குகளும், இரத்தினபுரியில் 23 சதவீத வாக்குகளும், குருணாகலையில் 25 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை திகாமடுல்லையில் 30 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    

Post a Comment

0 Comments