Subscribe Us

கொரோனாவை விட புதிய வகை நிமோனியா வேகமாக பரவி வருகிறது - China Warning

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தானில், அறியப்படாத புதிய வகை நிமோனியா வேகமாக பரவி வருவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நோயானது, உலகை தற்போது உலுக்கி வரும் கொரோனாவை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மாதம் மட்டும் 628 பேர் மரணமடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்போடு ஒப்பிடும்போது இந்த நிமோனியாவால் உயிரிழப்பு அதிகம் என சீனா கவலை தெரிவித்துள்ளது.

கஜகஸ்தானில் உள்ள சீனர்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், முகக்கவசம் அணிவதுடன் அடிக்கடி கைகளை கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சீனத் தூதரகத்தின் எச்சரிக்கையை உறுதி செய்யும் விதத்தில்,இந்த நிமோனியா தொற்று கொரோனாவை விட மூன்று மடங்கு வேகமாக பரவி வருவதாக கஜகஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நிமோனியா என்ற பெயரிலேயே புதிய தொற்றை அந்நாட்டு அமைச்சகம் அழைக்கிறது. தலைநகர் நூர் சுல்தானில் நாள் ஒன்றுக்கு 200 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் 300 பேருக்கு பெயரிடப்படாத நிமோனியா தொற்று உறுதி செய்யப்படுவது.

Post a Comment

0 Comments