Subscribe Us

கத்தாரில் நாளை முதல் மேலும் 300 பள்ளிகள் திறப்பு.!

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக, நாளை (28-07-2020) ஃபஜர் தொழுகையிலிருந்து மேலும் 300 மசூதிகள் மீண்டும் திறக்கப்படுவதாக Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
COVID-19 பரவலை தடுக்க, நடைமுறையில் உள்ள தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி மசூதிகள் பிரார்த்தனைக்கு அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மசூதிகளில் பிரார்த்தனை செய்ய வருபவர்கள் அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அமைச்சகம் நினைவூட்டியுள்ளது.
மேலும், மூத்த குடிமக்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் வீடுகளில் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments