Subscribe Us

header ads

Cricket Player முகமது ஹபீஸ்யிற்கு கொரோனா தொற்று இல்லை (ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு செய்தி)


வருகிற 28-ந்தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்லும் நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இங்கிலாந்து கிளம்பும் முன் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் நேற்று முன்தினம் இதில் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், முன்னணி பேட்ஸ்மேன் பஹார் ஜமான் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறியிருந்தது.

இந்த நிலையில் முகமது ஹபீஸ் தனது திருப்திக்காக லாகூரில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் வகையில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.

குறித்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆதாரமாக தான் மறு பரிசோதனை செய்த மருத்துவ அறிக்கையை புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தார்.

மேலும் இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பரிசோதனை சரியானது தானா? என்ற குழப்பம் மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று அனைத்து வீரர்களுக்கும் மறுபடியும் கொரோனா சோதனை நடத்தப்படும் என்று கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments