Subscribe Us

header ads

பிசினஸ் ஐடியா – 01 எந்த ஒரு தொழிலுக்கும் ஒரு ஆரம்பமும் அடித்தளமும் வேண்டும்.


எந்த ஒரு தொழிலுக்கும் ஒரு ஆரம்பமும் அடித்தளமும் வேண்டும். அதுவும் பணமாக மட்டுமல்லாமல் சிறந்த அறிவார்ந்த பூரண நோக்குடன் கொண்ட தீர்மானத்துடன் இருப்பதால் தான் அது எமக்கு இலாபமா நட்டமா என்பதை கணிக்க முடியும்.

உங்களால் எதை செய்ய முடியுமோ அதுதான் உங்களுக்கு சிறந்தது. அது தவிர்த்து நாங்கள் 1000 உதாரணங்களை எடுத்துக்காட்டினாலும் பலர் ஒவ்வொன்றிலும் உள்ள நெகிழ்வுத்தன்மையை மட்டுமே அவதானிக்கின்றீர்கள். இறுதியில் வேறொரு தீர்மானத்தை எடுக்க வாய்ப்பும் உண்டு.

உதாரணமாக, ஒரு சாப்பாட்டுக்கடை ஆரம்பிப்பதாக இருந்தால் அது தொடர்பாக சிலருடன் ஆலோசிக்க வேண்டும்.


உங்களுக்கு திருப்தி ஏற்படும் வரையில் ஆலோசித்தபடி நீங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலிலும் சாதக பாதகங்கள் உண்டு. அதன்படி நீங்கள் அதனை ஆராய்ந்து அவதானமாக முடிவுகள் எடுக்க வேண்டும்.

உங்களுக்குரிய வளங்கள் எவ்வாறுள்ளன என்பது தொடர்பில் அறிவு இருக்க வேண்டும். கடையை எங்கு அமைக்க போகின்றீர்கள்.? அமைவிடம் எவ்வாறுள்ளது? எவ்வாறான உணவு சமைக்க வேண்டும்? அதற்கு யார் சிறந்தவர். எதனை ஊழியர்கள்? தொழிலில் உள்ள சிக்கல்கள் என்னென்ன? போக்குவரத்து வசதி எவ்வாறுள்ளது? மூலதனம் எவ்வளவு ? அன்றாட செலவுகள் எவ்வளவு ஏற்படும்? போன்ற சகல வருமான செலவு கணிப்பீடுகள் இருக்க வேண்டும்.

சும்மா ஒரு சாப்பாட்டுக்கடை ஆரம்பித்து கம்பெடுத்தவன் எல்லாம் சண்டைக்காரன் என்பது போல எல்லோரும் துவக்கத்தில் கொண்டாடுவார்கள். பின்னர் கொள்ளை இலாபத்தை விரும்பி அது கிடைக்காததால் விட்டுவிட்டு ஓடிவிடுகின்றனர்.

எந்த தொழிலுக்கும் வாடிக்கையாளர் இல்லாவிட்டால் வருமானம் கிடைக்காது. அந்த வாடிக்கையாளர்களை தக்க வைப்பது தான் உங்கள் தொழிலின் ரகசியம்.

நோலிமிட் மாதிரி ஒரு மாபெரும் வர்த்தக சாம்ராஜ்யத்தை எல்லோரும் உருவாக்க இயலாது. இருப்பினும் பலரும் முயற்சித்தாலும் அவர்களுக்கென்ற தனித்துவம்தான் வாடிக்கையாளர் திருப்தியை பெற்றுக்கொண்டு இன்றும் உயர்ந்த ஸ்தாபனமாக காட்சியளிக்கின்றார்கள்.

இது அவர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. ஒவ்வொரு வணிகரும் வியாபாரியுமான நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது. ஒரே இரவில் உழைப்பது என்பது வெறும் கனவு மட்டுமே. ஒவ்வொரு இரவும் நீங்கள் அதன் வளர்சிக்காக சிந்தித்தால் தான் நீங்களும் உங்கள் தொழிலும் வளரும்.

இன்று எல்லோரும் ஆன்லைன் என்று கிளம்பிவிட்டார்கள். இது சாத்தியம் தான். ஆனால் சாதாரண ஒரு பாமரனை எப்படி அடைவது. அவனை எப்படி உங்கள் வாடிக்கையாளன் ஆக்குவது என்று சிந்தித்து பார்ப்பீர்களா?

கோழிமுட்டை வியாபாரமும் நல்ல இலாபம் தரும் தொழில்தான். கிடைப்பது ஒரு ரூபா தான். ஆனால் விற்பனைகள் பன்மடங்கு என்பதை மறவாதீர்கள். ஒவ்வொரு ரூபாவாக நீங்கள் எண்ணி எண்ணி உழைக்க வேண்டும்.

அந்த சிறுதுளிகள் தான் பெரும் வெள்ளமாய் மாறி தடைகளை உடைத்து தாண்டி வரும்.

உங்கள் தொழில் ஒன்று நிலையாக இருக்க மற்றவை சில உங்களுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு செய்யுங்கள். அது என்னென்ன என்று நான் சொல்லமாட்டேன். உங்கள் பிரதேசத்தை பொறுத்தது. அதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

எனவே நண்பர்களே...

ஒவ்வொரு தொழிலுக்கும் பணம் மட்டும் போதாது. நல்ல திட்டம் தேவை. அது பூரணமாக உங்கள் மனதை திருப்திப்படுத்திய பின்னரே நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். உங்கள் உறவினர்கள் குடும்பத்தினரின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும். அதற்க்கு முன்பாக நீங்கள் உங்கள் வியாபார திட்டம் தொடர்பான தெளிவு உங்களிடம் இருந்தால் உண்மையில் தன்னம்பிக்கை பிறக்கும்.


மாறாக நீங்கள் காசில்லை வழியில்லை. வாழ முடியவில்லை என்றால் தயவுசெய்து உங்கள் போக்கிலேயே வாழ்வது சிறந்தது.

நன்றி
அட்மின்

SLBI

Post a Comment

0 Comments