Subscribe Us

header ads

KDSQ (Kalpitiya Development Society – Qatar) அமைப்பின் புதிய நிருவாகம்



கத்தார் வாழ் கற்பிட்டி சகோதரர்களின் அமைப்பின் (Kalpitiya Development Society – Qatar) ஆறுவருட பூர்த்தியை முன்னிட்டு பொது கூட்டம் நேற்று (29/12/2018) நடைபெற்றது. 
இக்கூட்டம் சுயமத பிரார்த்தனையுடன் சகோதரர் மிஸ்காத் தலைமையில் நடைபெற்றது. கடந்த ஆறுவருட காலத்தில் KDSQ அமைப்பின் மூலம் ஆற்றப்பட்ட சேவைகள். அமைப்பின் தற்போதை நிலைமை போன்ற விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்ட பின்னர். புதிய நிருவாக தெரிவுக்க அழைப்பை முன்னாள் தலைவர் மிஸ்காத் விடுத்தார்.  

தலைவர் - சகோ. A.M அஜீம்  
செயலாளர் - சகோ. M.A.M சாதிக்  
பொருளாளர் - சகோ. R.M ரிப்லி 
 உதவி செயலாளர் - சகோ. M. அரபாத்  
உறுப்பினர்கள்: M. K.M சபான் கான், M.M இஜாஸ் மற்றும் M.மிப்ராஸ் ஆகியோர் நிர்வாக அங்கத்தவர்களுக்கு மத்தியிலிருந்து தெரிவாகினர். இதன் போது அமைப்பின் நடைமுறைகள் மற்றும் ஒழுங்கு விதிகள் நிர்வாக அங்கத்தவர்கள் மத்தியில் வாசிக்கப்பட்டு அனைவரும் பிரமாணம் செய்து பொறுப்பை ஏற்றனர். 

இவ்வமைப்பின் வெற்றிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் நிதி உதவி மற்றும் ஏனைய பங்களிப்புச் செய்த, செய்துகொண்டிருக்கும் கத்தார் வாழ் கற்பிட்டி சகோதரர்கள் மற்றும் கத்தார் நாட்டில் இருந்து வெளியேறி வேறு நாடுகளில் இருந்தும் உதவும் அணைத்து தரப்பினரும் நினைவு கூறப்பட்டதோடு. 
கடந்த ஆறுவருட காலத்தில் இந்த சகோதரர்களின் உழைப்பின் மூலம் எமது ஊரின் (சமூகத்தில்) உள்ள (கல்வி, மருத்துவ,உலர் உணவு என ) பலதரப்பட்ட நிதி தேவையுடையோருக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி 45,000 கத்தார் ரியால் அதாவது இலங்கை பணப்பெறுமதிப்படி பதினெட்டு இலச்சட்த்திற்கும் (1,800,000) அதிமகமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்! 

எதிர்வரும் காலங்களில் இன்னும் அதிகமாகன சேவைகளை செய்ய அல்லாஹ் எமது அணைத்து சகோதரர்களின் தொழில்துறைகளிலும் அவர்களின் வாழ்விலும் பறக்கத் செய்வானாக ஆமின். KDSQ Ex-Co - Media

Post a Comment

0 Comments