Subscribe Us

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைச்சர்களுக்கு காட்டமான அறிவிப்பு - விபரங்கள் உள்ளே


புதிய அமைச்சரவையால் வெளிநாட்டு பயணங்கள் குறைக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ இந்த புதிய அறிவிப்பை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஏற்கனவே மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்தபோது வெளியுறவு பிரதியமைச்சராக இருந்த வசந்த சேனாநாயக்க பல வெளிநாட்டு
பயணங்களை மேற்கொண்டார்.

எனினும் அவரின் பயணங்கள் புதிய அரசாங்கத்தில் குறைக்கப்படும் என்று சஜித் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் புதிய அமைச்சரவை, கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் துயரை துடைக்கும் வகையில் செயற்படும் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments