Subscribe Us

ஆடையில் சிறுநீர் கழித்த 4 வயது குழந்தைக்கு சூடு வைத்த தாய்! இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

தனது தாயினால் இரும்பு கரண்டியால் சுடப்பட்ட 4 வயதுடைய குழந்தை ஒன்று கண்டி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் குறித்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கண்டி, அலவதுகொட பகுதியை சேர்ந்த 4 வயதுடைய குழந்தை தனது ஆடையில் சிறுநீர் கழித்த காரணத்திற்காக தாய் சூடு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தையினால் அலவத்துகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை அடுத்து பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments