Subscribe Us

header ads

துபாயில் அனைத்து டேக்ஸிகளிலும் இனி இலவச Wi-Fi வசதி!


துபை டேக்ஸிகள் அனைத்திலும் இலவச வை-பை (Wi-Fi) வசதி செய்யப்படுகின்றது.

துபையில் 6 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 10,800 டேக்ஸிக்கள் இயக்கப்படுகின்றன. இந்த டேக்ஸிக்கள் அனைத்தும் இன்னும் ஒரு வருட காலத்திற்குள் படிப்படியாக இலவச வை-பை (Wi-Fi) வசதியுள்ள டேக்ஸிக்களாக மாறவுள்ளன. இதற்கான ஒப்பந்தம் துபை போக்குவரத்து துறை (RTA) மற்றும் டூ (Du) தொலைத்தொடர்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே கையெழுத்தகின.

ஏற்கனவே துபையில் இயங்கும் சுமார் 500 டேக்ஸிக்களில் பரீச்சார்த்த ரீதியாக டூ தொலைத்தொடர்பு நிநுவனம் இலவச வை-பை வசதிகளை தந்து கொண்டுள்ளது வெற்றியடைந்ததை தொடர்ந்தே அனைத்து டேக்ஸிக்களுக்கும் இச்சேவை விரிவாக்கம் செய்யப்படுகின்றது. ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து டூ தொலைத்தொடர்பு நிறுவனம் டேக்ஸிக்களில் வை-பை வசதியை ஏற்படுத்தும் வேலைகளை உடனடியாக துவக்கிவிட்டது, இப்பணிகள் ஒரு வருட காலத்திற்குள் முழுமையாக நிறைவடையும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments