Subscribe Us

அமீரகத்தில் கேம்களில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!


அமீரகத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் (Labour Camps) தொழிலாளர்கள் புத்துணர்வு பெறும் வகையில் தங்களின் சிறிதளவு ஓய்வு நேரத்தை விளையாட்டுக்களில் செலவிடும் வகையில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த மைதானங்களை எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் திறந்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துபை அல் ரபா போலீஸ் ஸ்டேஷனின் (Al Rafa Police Station) இயக்குனர் பிரிகேடியர் அஹ்மது தானி பின் கலீத்தா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

துபை முனிசிபாலிட்டியின் ஒத்துழைப்புடனும் துபை போலீஸின் முன்முயற்சியுடனும் அமைக்கப்பட்டு வரும் இம்மைதானங்களைப் போலவே இன்டெர்நேஷனல் சிட்டி, முஹைஸ்னா, அல் அவீர், அல் கோஸ் மற்றும் ஜெபல் அலி ஆகிய பகுதிகளிலுள்ள தொழிலாளர் முகாம்களுக்குள் சிறு, குறு கடைகளை அமைக்கும் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் மூலம் சட்டவிரோதமாக நடைபாதை வியாபாரிகள் பொருட்களை விற்கப்படுவது தடை செய்யப்படவுள்ளது. மேலும் சட்ட விரோத கடை நடத்துவோர், கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்போர், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் போன்றோரைப் பிடிக்கத் தேவையான சிசிடிவி கேமிராக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments