Subscribe Us

இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்களில் ஒரு கண்டன அறிக்கை வெளியிட மனமில்லாத மைதிரி ...

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக எப்படியான சம்பவங்கள் இடம்பெற்றாலும்,முஸ்லிம்களின் முழுமையான ஆதரவோடு ஆட்சிபீடம் ஏறிய தற்போதையே ஜனாதிபதிமைத்திரி பால சிறிசேனஎந்தவித கருத்துக்களையும் வெளியிடாது மௌனத்தைதொடர்ச்சியாக பேணி வருகிறார்.

ஒரு நாட்டில் பேசுபொருளான பிரச்சினை எழுகின்ற போதுஅந்த நாட்டின் அரச தலைவர்அது பற்றிய தெளிவுகளையும்நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்

அதற்காகவே தான்அவர் அந் நாட்டின் அரச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்இலங்கைமுஸ்லிம்களின் முழு ஆதரவோடு இந்த அரசு நிறுவப்பட்டிருந்ததுதங்களுக்குஆதரவளித்த முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால்,  அந் நாட்டின் அரச தலைவர் ஒருபடி மேல் கவனம் செலுத்தி குறித்த பிரச்சினையை கையாள வேண்டும்முஸ்லிம்களுக்குஎதிராக எப்படி பாரதூரமான விடயங்கள் இடம்பெற்றாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ தொடர்ச்சியாக மௌனத்தையே கடைப்பிடிப்பதையே வழக்கமாககொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் அளுத்கமை கலவரம்நடைபெற்றிருந்ததுஇதன் போது பதில் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரி பால சிறிசேனவே இருந்தார்அளுத்கமை கலவரத்தின் போது உடனடியாக செயற்பட்டுமுஸ்லிம்களை சரியான முறையில் பாதுகாக்காமைக்கான முழுப் பொறுப்பையும்ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனாவே ஏற்க வேண்டும்அந்த கலவரம் தொடர்பில்ஜனாதிபதி மைத்திரி எங்கும் பேசிய வரலாறில்லைகுற்றக் கறை என்னவோமுன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீதே படிந்துள்ளது.

தற்போதைய ஜனாதியின் ஆட்சிக் காலத்தில் கிந்தோட்டை மற்றும் அளுத்கமை ஆகியபிரதேசங்களில் நேரடியான கலவரங்கள் நடைபெற்றுள்ளனஇது தொடர்பில் ஜனாதிபதிமைத்திரி ஒரு வார்த்தையளவான கருத்து கூட வெளியிடவில்லைமுஸ்லிம்களதுபிரச்சினைகள் தொடர்பில் கருத்து கூற அஞ்சும் ஜனாதிபதிமுஸ்லிம்களின்பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பார் என்று நம்புவதை போன்ற மடமை வேறுஎதுவுமே இருக்காதுஇந்த விடயமானது அவர் முஸ்லிம்களை ஒரு பொருட்டாகவேகவனத்தில் கொள்ளமையை எடுத்து காட்டுகிறதுஇலங்கை முஸ்லிம்களுக்கு சரியான நீதிநிலை நாட்டப்பட வேண்டுமாக இருந்தால்முதலில் ஜனாதிபதி மைத்திரியை முஸ்லிம்கள்புறக்கணிக்க வேண்டும்.

 அஹமட் 

Post a Comment

0 Comments