என்னுடைய டுவிட்டருக்கு உதவியாளர்கள் கிடையாது சில நேரங்களில் படுக்கையில் இருந்து கொண்டே டுவிட் செய்வேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
லண்டனை சேர்ந்த தனியார் தொலைகாட்சி நிறுவனம் நடத்திய நேர்காணில் டொனால்ட் டிரம்ப் டுவிட்டர் பதிவு குறித்து கேள்வி எழுப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
என்னை குறித்து தவறான கேள்விகளுக்கு பதில் அளிக்க மக்களுடன் தொடர்பு கொள்ள சமூக வலைதளங்கள் பயன்படுகின்றது. என்னை பற்றி தவறான சர்ச்சைகள் வெளிவருகின்றது. அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க டுவிட்டர் தான் பயன்படுகிறது. பெரும்பாலும் என்னுடைய கருத்துக்களை டுவிட் செய்வதற்கு உதவியாளர்களை வைத்துக்கொள்வது கிடையாது. சில நேரங்களில் படுகையில் இருந்து கொண்டும், உணவு அருந்திகொண்டும் டுவிட் செய்வேன். அமெரிக்காவில் நான் மிகவும் பிரபலமானவர். எனது டுவிட்டரை எதிர்பார்த்து உலகம் முழுவதும் பலர் காத்து கொண்டிருப்பார்கள்.
டொனால்ட் ட்ரம்ப் இரண்டு டுவிட்டர் கணக்குகளை பயன்படுத்தி வருகிறார். @realDonaldTrump கணக்கில் 47.2 மில்லியன் பின் தொடர்பாளர்களுடம், president trump என்ற டுவிட்டரில் 22 மில்லியன் பின் தொடர்பாளர்களும் இரண்டையும் சேர்த்து 69 மில்லியன் டுவிட்டர் வாசிகள் டிரம்பை பின் தொடர்கிறார்கள்.
மேலும் சமையல் குறித்தும், உலக தலைவர்கள் நட்பு குறித்தும் பெண்களுக்கு உரிய மரியாதை அளிப்பது குறித்து பல்வேறு கேள்விகளுக்கு டிரம்ப் பதில் அளித்தார்.
0 Comments