Subscribe Us

header ads

மத்திய வங்கியில் கை வைத்த “மிஸ்டர் கிளீன்” தற்போது “மிஸ்டர் டேர்டி”யாகிவிட்டார்..


இன்று இவ்வாட்சியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியை கண்டுபிடித்தவர்கள்,எமதுஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறும் ஒரு மேசடியையேனும் கண்டுபிடிக்கமுடியாமல் திணறுவதிலிருந்துஎமது கைகள் எந்தளவு சுத்தமானவை என்பதைஅறிந்துகொள்ள முடியுமென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது பிணைமுறி மோசடிக் கள்வர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர்.இதுஎமக்கு எப்போதே தெரியும்.அந் நேரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்கவுக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்துநிரூபிக்க முயன்றோம்அது அன்று தோல்வியுற்றாலும்இன்று வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஆட்சியானது,நாம் ஊழல் செய்தோம் என்ற பிரதான குற்றச்சாட்டை முன்வைத்தேஆட்சி பீடம் ஏறியது.அவர்களுக்குள் உள்ள மோசடிக்காரர்களை கண்டு பிடித்தவர்களால்,ஏன் எங்கள் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளை கண்டுபிடிக்கமுடியவில்லை.நாம் ஊழல் செய்திருந்தால் விட்டிருப்பார்களா?

இது இவ்வாட்சி அமையப்பெற்ற பிறகு இடம்பெற்ற ஊழல்இந்த ஆட்சிஅமையப்பெற்றதிலிருந்து நாங்கள் ஊழல் செய்தோமென கண்டுபிடிக்க பலபிரயத்தணங்களை மேற்கொண்டு வருகின்றனர்இந்த ஆட்சியாளர்களின் பிரதானபணியே எங்கள் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழலை கண்டுபிடிப்பது என்றாலும்தவறில்லை

தங்களுக்குள் உள்ள கள்வர்களை கண்டுபிடிக்க முடியுமாக இருந்துஅவர்கள்எங்களுக்குள் உள்ளதாக கூறும் கள்வர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லைஎன்றால்அதனை பொய்யாகவே பார்க்க வேண்டும்.எதிர்வரும் தேர்தல் மேடைகளில்எங்களை தவறாக சித்துரித்து பேசும் போது இதனை சிந்தித்து தெளிவைபெற்றுக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments