Subscribe Us

header ads

அக்கரைப்பற்றில்மக்கள் காங்கிரஸின் பணிமனை அங்குரார்ப்பணம்! (படங்கள் இணைப்பு)

-ஊடகப்பிரிவு-


அக்கரைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், மக்கள் பணிமனை ஒன்றை அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் (14)அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்அக்கரைப்பற்று பிரதேச சபையின் தலைமை வேட்பாளரும், மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளருமான என்.டி.நியாஸ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், தூய காங்கிரஸின் பிரமுகருமான ஹனீபா மதனி, ஏ.எல்.மர்ஜூன் ஆகியோர் உட்பட மக்கள் காங்கிரஸின் செயலளார் நாயகம் எஸ்.சுபைர்தீன், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான எஸ்.எஸ்.பி.மஜீத், எம்.என்.எம்.நபீல், டாக்டர்.முனாசிக்உட்பட பலர் கலந்துகொண்டனர்.





Post a Comment

0 Comments