சவுதி அரேபியாவில் ரெஸிடென்ட் பெர்மிட் எனப்படும் இகாமாவில் ஜாப் டைட்டில்ஸ் என்கிற உத்தியோகப் பெயரை (Designation) மாற்றுவதற்கு தடை விதித்தது சவுதி அரேபியாவின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைச்சகம். அதேவேளை ஆன்லைன் வழியாக அப்பீல் செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது.
வணிக நிறுவனங்கள் எந்தெந்த பணிகளுக்காக பதிவு செய்யப்பட்டதோ அதை தவிர்த்து வேறு தொழில்களில் ஈடுபட கூடாதெனவும், இதை மாற்றிக் கொள்ள 4 வார அவகாசமும் வழங்கப்பட்டு திங்கட்கிழமையுடன் முடிவுற்றது. இனி அதிரடி சோதனைகள் செய்யப்பட்டு பிடிபடுபவர்களிடம் 25,000 திர்ஹம் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
சவுதிமயப்படுத்தலுக்காக ஆட்குறைப்பு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதல் விசாக்கள் வழங்கப்படாது. மேலும், 60 வயதில் ஓய்வு பெற்ற சவுதியர்களை விரும்பும் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்றாலும் இவர்கள் வணிக நிறுவனங்களில் கட்டாயம் சவுதியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற சட்ட எண்ணிக்கைக்குள் வர மாட்டார்கள் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
-Adirai.net-
0 Comments