Subscribe Us

header ads

கல்பிட்டி அல்ஹிரா ஆரம்ப பாடசாலை சர்வதேச சிறுவர் தின வரலாற்று நிகழ்வு (படங்கள் இணைப்பு)


கல்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிப்பிக்கும் முகமாக முதல் முதலாக அல் ஹிரா சரித்திரத்தில் மறக்க முடியாத நிகழ்வாக சிறுவர் விஷேட விளையாட்டு நிகழ்வு ஒன்றை பிரமாண்டமாக நிகழ்த்தினார்கள்.

அத்துடன் அல்ஹிரா ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற சிறுவர் தின விழா சிறப்பு நிகழ்வுகளை பார்வையிட வந்த ஜன்னதுல் அஸாபிர் முன் பள்ளி சிறார்களும் ஆசிரியர்களும் ஊர் நலன் விரும்பிகளும் வருகை தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதம அதிதிகளாக கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க அவர்கள்,வடமேல் மாகாண சபை உறுப்பினர் N.T.M.தாஹிர் அவர்கள்,முன்னால் பிரதேச சபை உறுப்பினர்களான A.J.M.தாரிம்,A.M.இன்பாஸ்,கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் சருபுதீன் ஹாஜி,கல்பிட்டி சுற்றுலாத்துறை சங்க செயலாளரும் கைட் பெரடைஸ் ஹோட்டல் உரிமையாளருமான அப்துல் மலிக்,கல்பிட்டி ஆட்டோ சங்க தலைவர் K.M.சவ்பான்,பெறிய பள்ளி செயலாளர் ஐயூப் G.S. சின்னக்குடியிருப்பு பஸார் பள்ளி தலைவர் சப்ரி ஹிஜி,ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அல் ஹிரா பாடசாலை கட்டிடத்தை அமைத்துக் கொடுத்த மேலும் அக்கட்டிடத்தின் மேல் பகுதியிலேயும் வகுப்பறைகளை  கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்த மேர்ஸி லங்கா நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் அஷ்ஷெய்க் M.R.M. முனாஸ் இந்நிகழ்வில் தெரிவித்தார்.

-Rizvi Hussain-















































Post a Comment

0 Comments