Subscribe Us

புத்தளம் பொலிஸ் நிலையத்தில் இப்படி ஒரு நேர்மையான அதிகாரியா! விபரங்கள் உள்ளே!


புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவரினால், வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை அதன் உரிமையாளரை தேடி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பணப் பையில் பெறுமதியான பணம் மற்றும் ஆவணங்கள் இருந்துள்ளன.

பணப்பையில் 65300 ரூபாய் பணமும், தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் மற்றும் பெறுமதியான ஆவணங்கள் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி செல்லும் போது புத்தளம் நகரத்தில் இந்த பணப்பையை தவறவிட்டுள்ளார்.

குறித்த பணப் பையை கண்டெடுத்த பொலிஸ் காண்ஸ்டபிள், அதன் உரிமையாளரை தொலைபேசி ஊடாக கண்டுபிடித்து, பின்னர் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரியின் நேர்மையான செயற்பாடு குறித்த பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments