Subscribe Us

ப்ளூவேல் கேம் > கடற்கரைக்கு சென்ற பெண்ணை காப்பாற்றிய போலீசார்..!


புதுச்சேரி உப்பளம் பகுதியில் ப்ளூவேல் விளையாடிய இளம் பெண்ணை பத்திரமாக மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

புதுச்சேரியில் ப்ளூவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்டவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, உப்பளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர் ப்ளூவேல் விளையாடுவதாக அவரது தோழி மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து, ப்ளூவேல் விளையாட்டில் தனக்கு கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்ற கடற்கரைக்கு சென்ற அந்த பெண்ணை, ஒதியஞ்சாலை போலீசார் தடுத்து நிறுத்தி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Post a Comment

0 Comments