Subscribe Us

header ads

சிறுநீரக செயலிழப்பை தடுக்க ஈஸியான ஒரு வழி


சிறுநீரக செயலிழப்பை தடுக்க பழங்கால மருத்துவத்தில் இஞ்சி ஒத்தடம் முறை உள்ளது. இம்முறையை சரியாக பின்பற்றினால் நல்ல பலனைக் காணலாம்.
இஞ்சி ஒத்தட முறை
முதலில் ஒரு பானையில் 3 லிட்டர் நீரை கொதிக்க வைத்து 125 கிராம் இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி அதை அரைத்து ஒரு துணியில் வைத்து கட்ட வேண்டும்.
பின் கொதிக்கும் நீரில் இஞ்சி சாற்றை நன்கு பிழிந்து விட்டு அதில் இஞ்சி வைத்து கட்டிய துணி மூட்டையையும் போட்டு மூடி வைக்க வேண்டும்.
20-25 நிமிடங்கள் கழித்து இறக்கி, மூடிய நிலையில் 5 நிமிடம் வைத்து விட வேண்டும்.
பயன்படுத்தும் முறை
சிறுநீரகம் செயலிழப்பினால் பாதிக்கப்பட்டவரை குப்புற படுக்க வைத்து ஒரு துணியை கொதிக்க வைத்த இஞ்சி நீரில் நனைத்து புழிந்து அந்த துணியை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிப்பகுதியில் விரித்து போட வேண்டும்.
பின் அந்த துணியின் சூடு தணிந்தவுடன் மீண்டும் அதை நனைத்து அதேபோல் அரை மணி நேரம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
பின்பற்ற வேண்டிய உணவுக் கட்டுபாடு
  • சிறுநீரக் செயல்பாட்டை சீராக்க உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியம். அதனால் சோடியம் அளவை குறைக்க உணவில் உப்பை குறைக்க வேண்டும். அதற்கு பதிலாக எலுமிச்சை மற்றும் மிளகை சேர்த்துக் கொள்ளலாம்.
  • உணவில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸின் அளவை குறைக்க பயிர் வகைகள், பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
  • பொட்டாசியம் நிறைந்த காய்கறிகளை 4 மணி நேரம் நீரில் ஊறவைத்து சமைத்தால், அதில் உள்ள பொட்டாசியத்தை குறைக்கலாம்.
  • புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் ஊறவைத்த முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடலாம்.
  • ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தினமும் 1.4 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அதனுடன் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், சாம்பார் மற்றும் ரசம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.
  • புளி, மஞ்சள் மற்றும் ஓம இலையை தினமும் நாம் சாப்பிடு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சிறுநீரகக் கற்களின் உருவாக்கத்தை தடுக்கலாம்.
  • தினமும் பூண்டு, வெங்காயம், கேரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ் ஆகிய காய்கறி வகைகளை சாப்பிட வேண்டும்.
  • பழங்களில் ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணி போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை?
காய்கறிகளில் தக்காளி, புளிச்சைக் கீரை, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவையும் பழங்களில் வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி, ஆரஞ்சு, உலர் பழங்கள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.

Post a Comment

0 Comments