இதய சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஸ்டென்ட்டின் விலையை பாரியளவில் குறைப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி நேற்று இரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைய இந்த விலை குறைப்பு அமுலுக்கு வந்துள்ளது.
இதயச சத்திர சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் உலோக ஸ்டென்ட்டின் விலை, 75 ஆயிரம் ரூபாயில் இருந்து 24 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
இதனுடன் மருந்துகளுடன் வெளியிடப்படும் ஸ்டென்ட்டின் விலை, 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments